Friday, March 18, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்....1

ிஸ்கி: கந்த இரு வுடங்காக ஃபேஸ்புக்கில் ிறுக்கியற்றை, இங்கே பிவிடிறேன்!


ன்னமோ ரக்ஷாபந்தனாம்...இந்த ரோமியோக்கள் ஸ்டேடஸ் தொல்லை தாங்கலை..கையை வெளியே காட்டாதே, காலை வெளியே காட்டாதே, ஜிப்பை மூடு-ன்னு ஒரே அட்டகாசம்.

ஏன்யா இப்படி வெறுப்பேத்துறீங்க? எங்களையெல்லாம் அதுக்குக்கூட யாரும் மதிக்கிறதில்லைய்யா................!!

------------------------------------------------------------------
 
கிளிமூக்கு ராக்ஸ்!

படித்த மற்றும்/அல்லது உலகப்பட அறிவுள்ள ஆட்கள் எளிதில் திருப்தியடைவதில்லை.

எல்லாத்துறைகளையும் போலவே, சினிமாத் துறையிலும் ஆண்டான் - அடிமை முறை மறையும் காலம் இது.

- ஆகியவையும் இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம்.
கேள்வி :- தமிழ்த்திரைத் துறையில் புதிய தலைமுறை இயக்குநர்களின் வெற்றியின் ரகசியம் என்ன? 

ிளிமூக்கபதில் :- அன்று கலைஞர் திரைப்பட மொழியில் புதிய அலையைத் தோற்றுவித்தார். இன்று அவர் பெயரில் இருக்கும் கலைஞர் தொலைக்காட்சி புதிய அலை இயக்குநர்களைத் உருவாக்கி இருக்கின்றது என்பது மிகப்பெரிய தற்செயல். இந்தத் தற்செயலை இன்று நாம் காணும் தரமான திரைப்படங்களுக்கான விதையாக்கிய புதிய தலைமுறை இயக்குநர்களின் வெற்றிக்கானகாரணங்களாக நான் நினைப்பவை
1 படித்தவர்கள் - பெரும்பாலோனோர் பொறியியல் வல்லுனர்கள். குறை படிப்பு படித்தவர்கள் ஒரு விஷயத்தை செய்வதற்கும் , நிறைவான படிப்பு படித்தவர்கள் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. ரசிகர்களுடன் சாதாரண ரசிகர்களாக இருந்து சினிமா பார்த்து வளர்ந்து சினிமா நுட்ப அடிப்படைகளை ஏறக்குறைய ஏகலைவன்களாகக் கற்றுக்கொண்டவர்கள். திரைத்துறைக்குத் தேவையான மேலதிகப் பயிற்சிகளையும் படிப்பாகவும் கற்றுக்கொண்டவர்கள் .வெள்ளித்திரைக்கு முன்னோட்டமாக , குறும்படங்களைப் பயிற்சியாக எடுத்து நிருபித்தவர்கள். தொடர் பயிற்சி வெற்றிக்கு முதற்படி என்பதை சரியாக செய்தவர்கள்

2. சினிமா வாசமே இல்லாத நடுத்தர குடும்பங்களில் இருந்து வந்திருக்கும் முதல் தலைமுறையினர். அரை வயிறு கால் வயிறு சாப்பிட்டு பஞ்சப்பாட்டு பாடி வாய்ப்புகளைத் தேடாமல் , படித்து காலத்தேப் பயிர் செய்து , குடும்பத்திற்கும் தனக்கும் போதுமான அளவிற்கு பொருள் சேர்த்து வைத்துவிட்டு திரைக்கடலில் குதித்தவர்கள். ஒருவேளை தோற்றால் கூட, மீண்டும் பழைய வேலைக்குப் போய் சிரமமின்றி வாழ முடியும் என்ற நம்பிக்கை சமரசப்போக்கின்றி தங்களுக்கான படைப்புகளை உருவாக்க முடிகின்றது. இவர்களுக்கு கழிவிரக்கம் கிடையாது

3. கிணற்றுத் தவளைகள் போலல்லாது நியு ஏஜ் இயக்குநர்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடியபின்னர் திரைக்கடலில் குதித்தவர்கள். தமிழ்நாட்டு பின்புலம் , கேட்டறிந்த படித்தறிந்த பார்த்தறிந்த வாழ்ந்தறிந்த பிற நாட்டு பண்பாட்டு சமூகவியல் விசயங்கள் ஆகியனவற்றை ஒப்பிட்டு எவை எவை தேவை இல்லையோ அவற்றை நீக்கி, பழைய மொந்தையில் என்றாலும் இதுவரை ருசி அறிந்திராத புதிய கள்ளைக் கொடுக்க தெரிந்தவர்கள் . ஒரு நாட்டின் பண்பாட்டு கூறுகளை ஆய்வு செய்ய வேண்டுமானால் அந்த நாட்டின் உணவுப் பழக்க வழக்க முறைகளை ஆராய்ந்தால் போதும் என்று சொல்வார்கள். கடல் கடந்து வாணிபம் செய்து தழைத்தோங்கி விளங்கிய நாகரிங்களில் உணவுப் பழக்க வழக்க முறை சிறப்பாக இருக்கும். அந்தக் காலங்களில் உணவு முறைகள் என்றால் இக்காலத்திற்கு கலை, திரைப்படம் மற்றும் ஊடகங்கள். இராம நாரயணின் அருளால், எப்பொழுது ஜேம்ஸ் பாண்டுகளும் ஜாக்கிசான்களும் அவதார் நாயகர்களும் தமிழ்ப் பேச ஆரம்பித்தார்களோ அப்பொழுதே தமிழ் திரைப்பட ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிவிட்டது. பசிக்காக சாப்பிட்டிக் கொண்டிருந்தவர்கள் ருசிக்காக சாப்பிட ஆரம்பிக்கையில் வெரைட்டி காட்ட வேண்டும். அதை நியு வேவ் இயக்குநர்கள் சரியே செய்கின்றனர்.

4. தமது படைப்புகளை தாமே முதல் விமர்சகர்களாக இருந்து பார்ப்பவர்கள். சுய விமர்சனம் , சுய எள்ளல் ஆகியன முந்தைய தலைமுறை இயக்குநர்களிடம் காணமுடியாதது. கட்டமைக்கப்பட்ட புனிதங்களை அடித்து நொறுக்கு கின்றனர். அதனால் தான் 'குப்ப படம்' என்று சொல்லி திரைப்படத்தை ஆரம்பிக்க முடிகின்றது. புதிய இயக்குநர்கள் குறைந்த பட்சம் இரு மொழிகளில் புலமை உடையவர்கள். கூட இருக்கும் உதவி இயக்குநர்களும் . படித்தவர்கள் இணையான ஆளுமைகள் என்பதால் திரைப்பட விவாதங்களில் படைப்புகள் மேம்படுகின்றன. தங்களது படங்களில் பார்த்து பார்த்து சலித்த முகங்களைக் காட்டாமல் புத்தம் புதிதாய் புதிய நடிகர்களை, புதிய இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்துகையில், அது மக்களுக்கும் புதிய அனுபவத்தைக் கொடுக்கின்றது

மேற்சொன்னவைகள் முன்னர் பின்னர் இருந்தாலும் , இதை நாம் ஈடுபடும் எத்துறையில் காட்டினாலும் வெற்றி நமக்கே.
--------------------------------------------------------------------

தல..தல

என்னடா?

குண்டு போடறாங்க தல..

என்னடா சொல்றே?

அப்பாவிங்களை கொல்றாங்க தல..

அப்பாவிங்களைக் கொல்றதே இவங்களுக்கு வேலையாப் போச்சு.

கண்டிச்சு சங்கம் சார்பில் ஒரு அறிக்கை விடுங்க தல.

இங்க வாடா..(பளார்..பளார்)

ஏன் தல?

முதல்ல யார் சாகுறாங்கன்னு சொல்லு..அப்புறம், அதை எதிர்க்கிறதா, கமுக்கமா மூடிக்கிட்டு இருக்கிறதான்னு முடிவு பண்ணுவோம்!
----------------------------------------------

//வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளையும் எதிர்த்து 234 தொகுதிகளிலும் எனது கட்சியை போட்டியிட வைப்பேன்- சீமான் //

இது தான்ணே உங்ககிட்ட பிரச்சினை! உணர்ச்சிவசப்பட்டு, எதையாவது சொல்லிடறது..இப்போ 234 பேருக்கு நாம எங்க போக? டி.ஆர்கிட்ட ஹெல்ப் கேட்போமா?

--------------------------------------
நம் மரியாதைக்குரிய ஒரநடிகர் எப்பொழுது பேட்டி கொடுத்தாலும் தவறாமல் சொல்லும் விஷயம், ‘நான் நல்லவன். எல்லாரும் எஞ்சாய் பண்ணாங்க. ஆனால் நான் பண்ணலை”. இது அளவுக்கு மீறும்போது நமக்கு எரிச்சலையே உண்டாக்குகிறது. இன்னொரு ல்லான டி.ராஜேந்தர்கூட தன்னைப் பற்றித் தான் பேசுவாரேயொழிய, பிறரைப் பற்றி கமெண்ட் பண்ணியதில்லை. நம்பியார் அவர்கள் இதுபற்றிப் பேசியதாகவே தெரியவில்லை.இவருக்கு ஆக்சுவலி என்ன பிரச்சினை?

தியாகப் புலம்பல்என்பது பற்றி ஓஷோ முன்பு சொன்னது ஞாபகம் வருகிறது. ‘உலகத்திலேயே பரிதாபதக்குரிய ஜீவன்கள் தியாகிகள் தான். தியாகம் என்பது என்ன? ஏதோ ஒன்றை செய்ய ஆசைப்படுகிறீர்கள், அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆனாலும் எதனாலோ அதைச் செய்யாமல் விடுகிறீர்கள். பிறகு, அதற்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். ‘நான் செஞ்சிருக்க முடியும், ஆனால் செய்யலை பார்த்தீங்களா? நான் நல்லவன் தானே?” எனும் தியாகப் புலம்பல் ஆரம்பமாகிவிடுகிறது.

ந்திகர் விகடனில் சொல்லியிருப்பதன் பொருள் என்ன? ‘நான் என்னுடன் நடித்த நடிகைகளை ஒன்றுமே செய்ததில்லை. ஆனால் மற்ற நடிகர்கள் மோசம். மீடியா துணையுடன் அதை மறைத்துவிடுவார்கள்என்பது தானே? இதில் அவர் சகநடிகர்களை மட்டும் இழிவுபடுத்தவில்லை, உடன்நடித்த நடிகைகளையும் அல்லவா இழிவுபடுத்துகிறார்?

ந்திகின் பிரச்சினையை மேலும் புரிந்துகொள்ள, இந்த ஜென் கதை உதவலாம் :

ஒரு ஜென் குருவின் சிஷ்யர்கள், அவரின் உத்தரவுப்படி கடுமையான பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்து வந்தார்கள். பெண்களுடன் பேசுவதில்லை; ஏன் பார்ப்பதுகூட இல்லை. 

ஒருமுறை அதிகாலையில் குருவுடன் ஒரு ஆற்றைக் கடக்க முற்பட்டபோது, ஒரு அழகிய பெண் வந்தாள். தனக்கு நீச்சல் தெரியாது என்றும் தான் ஆற்றைக் கடக்க யாராவது உதவ முடியுமா என்றும் கேட்டாள். சிஷ்யர்கள் வானத்தையும் பூமியையும் வெறித்துப் பார்த்தபோது, குரு அந்தப் பெண்ணுக்கு உதவ ஒத்துக்கொண்டார். அந்தப் பெண்ணை தூக்கியபடியே ஆற்றைக்கடந்து, அக்கரையில் விட்டார்.

சிஷ்யர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அவர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு பெண்ணை தொட்டுத் தூக்குவதாவது, அய்யகோ! இரவு வந்தும், ஒரு சிஷ்யனுக்கு மனது ஆறவில்லை. நேராக தூங்கிக்கொண்டிருந்த(!) குருவிடம் சென்றான். அவரை எழுப்பிஇது எந்த விதத்தில் நியாயம்?’ என்று கேட்டான். குரு சொன்னார்: ‘ஏம்ப்பா, நாந்தான் அவளை காலையிலேயே இறக்கி விட்டுட்டனே? நீ ஏன்ப்பா இன்னும் அவளை சுமந்துக்கிட்டு இருக்கிறே????”


//'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்க பிரேசில் கிளம்பினார் மோடி-செய்தி//

நல்லா விவரமாச் சொல்லி கூட்டிட்டுப் போங்கப்பா..இல்லேன்னா, அங்கே போய்எங்களுக்கு ஒரு லோடு செங்கல் வேணும்ன்னு கேட்டுவிடப் போறார்! 

//என்னை மதிப்பவருக்கே என்னைத் தருவேன்! - நயன்தாரா//

ம்...இதுவரைக்கும் தோராயமா எத்தனை பேர் இவங்களை மதிச்சிருப்பாங்க?

------------------------------------------------
பாருங்கய்யா நம்ம மணவாடுகளை..ரசனையான மனுசங்கன்னா அவங்க தான்யா! த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்ல நம்ம மீனு தான் ஹீரோயினாம். மலையாளத்துல கூட டல்லா இருந்துச்சு. தெலுங்குல சீவிச் சிங்காரிச்சு, பொட்டு-பூவு வச்சு, பார்க்கவே தூக்குது வாசம்! எதையும் கலர்ஃபுல்லாச் செய்யறதுல, அவங்களை அடிச்சுக்க முடியாது!

தமிழ்ல நடிக்க வைக்க மாட்டாங்களாம்..கன்னடத்துல நடிக்க வைக்க மாட்டாங்களாம்..அப்பப்பா,என்ன பந்தா..என்ன பந்தா! போடா, அந்த ஆண்டவனே நம்ம பக்கம்!


காலேஜில் படித்த காலத்தில் எங்கள் கிராமத்தில் நான் நாடகங்கள் போடுவது வழக்கம். நான் டைரக்டர் மட்டுமே, நடிக்க ஊரில் இருக்கும் பசங்களைத் திரட்டுவோம். ஆம்பிளைக்கு பெண் வேடம் போட்டு ஹீரோயின் ஆக்குவது டைரக்டருக்கு(!)ப் பிடிக்காது. ’டைரக்டர்ஒரு ெர்ஃபெக்சன் விரும்பி என்பதால், ஹீரோயின் வேடத்திற்கு ஒரு சொந்தக்காரப் பெண்ணையே கெஞ்சிக்கூத்தாடி நடிக்க வைப்பேன்.

தம்பிமார்கள் யாராவது ஹீரோவாக நடிப்பார்கள். அந்தப் பெண் நடித்தால் ஹீரோவாக நடிப்பதற்கு பெரும் அடிதடியே நடக்கும். ‘நீ தைப்பொங்கலுக்கு நடி..அவன் ஊர்ப்பொங்கலுக்கு நடிக்கட்டும்..இவன் அடுத்த வருசம்என்று பஞ்சாயத்தை முடிப்பேன். அதுவரை சைடு கேரக்டரில் வந்தவன்கூடஅண்ணே, வில்லன் வேசமாவது கொடுங்கண்ணேஎன்று பீதியைக் கிளப்புவான்.

அப்படி ஒருமுறை அந்தப் பெண்ணும் ஹீரோவும் ரோஜா நடித்தஆளான நாள் முதலாபாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது கூட்டத்தில் ஒருவர் என் மச்சானிடம்அந்தப் புள்ள நல்லா ஆடுதேய்யாஎன்று சொல்லி இருக்கிறார். அதற்கு என் லொள்ளு மச்சான்இவ ஆட்டம் என்னய்யா...இவ அம்மா ஆட்டத்தைப் பார்க்கணுமேஎன்று சொல்லிவிட்டார்.(மச்சானுக்கு அந்தப் பெண்ணின் அம்மா முறைப்பெண்!). மச்சான் அப்படிச் சொல்லும்போது பின்னால் உட்கார்ந்திருந்தது, அந்த அம்மாவின் தம்பி/அண்ணன்மார்கள். அப்புறம் என்ன..கலவரம் தான்!

விஷயம் தெரியாமல் மச்சான் தரப்பும் மச்சானுக்கு ஆதரவாக களம் இறங்க, அரைமணி நேரம் அடிதடி நடந்து முடிந்தது. பிறகு மேடைக்கு அடியில் ஒளிந்திருந்த டைரக்டரான என்னிடம் வந்தார்கள். ‘தம்பி, உம்மூஞ்சிக்காகத் தான் நடிக்க அனுப்புனோம், இனிமே யாராவது வீட்டுப்பக்கம் வந்தீங்க....’ என்று நாக்கைத் துருத்தி நம்மை டரியல் ஆக்கினார்கள்.

அதன்பிறகு பசங்களையே பெண் வேசம் போட வைத்து ஒப்பேற்ற வேண்டியதாகிவிட்டது. அதில் என்ன பிரச்சினையென்றால், ஹீரோவாக நடிக்க எவனும் ரெடியாக இல்லை. டைரக்டர் பந்தா காட்டிய காலம் போய், ஹீரோக்களிடம் கெஞ்சும் நிலைமை வந்துவிட்டது.

முன்னாடி எப்படி இருந்தோம்..என்று நினைத்துக்கொள்வேன்.நாடகம் தான் என்றாலும்நீ குட்டையா இருக்கே..உனக்கு ஹீரோ வேசம் கிடையாது..நீ கருப்பா இருக்கே, ராஜா வேசத்துக்கு செட் ஆக மாட்டேஎன்று கெத்து காட்டுவதில் கிடைக்கும் சந்தோசமே தனி தான்!

#ிழுவி மியன் பேட்டியை முன்னிட்டு..!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.