Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்....14



இஞ்சி இடுப்பழகி பட ஸ்டில்களின் அனுஷ்காவைப் பார்க்கும்போது, கொஞ்சம் கவலை வருகிறது.
முதலில் ஒல்லியாக இருக்கும் போர்சன்களை எடுத்து முடித்துவிட்டு, பிறகு குண்டான போர்சனை எடுத்தார்கள் என்று யூகிக்கிறேன். இப்படி ஒரு நடிகை குண்டாவதில் உள்ள சிக்கல் என்னவென்றால்...
பிரபு ஏற்கனவே குண்டான ஆள். ஆனாலும் உடலை கொஞ்சம் கட்டுக்குள் வைத்து ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். அப்போது தான் டூயட் பட வாய்ப்பு வந்தது. கதைப்படி, ஹீரோ பயங்கர குண்டான ஆள். எனவே நன்றாக சாப்பிட்டு, உடலை ஏற்றிவிட்டார்.
ஷூட்டிங் முடிந்தது. அடுத்து உடலை குறைப்போம் என்று முயன்றபோது தான்அது முடியாத காரியம்..தான் கமல் அல்லஎன்று அவருக்குப் புரிந்தது. அங்கேயிருந்து தான் அவரின் வீழ்ச்சி ஆரம்பித்தது. (டூயட்டும் ஓடவில்லை!!)
அனுஷ்கா இஞ்சி இடுப்பழகிக்காக அதே ரிஸ்க்கை எடுத்திருக்கிறார். அவரது அர்ப்பணிப்பை நாம் பாராட்டினாலும், பிரபு கதை ஞாபகம் வந்து பீதியூட்டுகிறது.
யோகா டீச்சர் அப்படியெல்லாம் நம்மைக் கைவிட மாட்டார் என்று நம்புவோம். இல்லையென்றாலும், பிரபு குண்டானதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை..ஆனால் அனுஷ்கா குண்டானால், நமக்கு அழகான ஆண்ட்டி கிடைப்பார் என்று பாசிடிவ்வாக எடுத்துக்கொள்வோம்.
நம் பத்திரிக்கை அறிவிஜீவிகள் அடிக்கடி சொல்லும் விஷயம், ’குழந்தைகளுக்கு எந்த துறையில் விருப்பமோ அதில் தான் அவர்களை விட வேண்டும். நாமே வலிய
எதையும் திணிக்கக்கூடாது’.
நான் என்ன செய்தேன் என்று யோசித்துப்பார்த்தேன். ஒன்பதாவது படிக்கும்போது, பாடகர் ஆகியே தீருவது என்று முடிவு செய்திருந்தேன். எனவே பழுப்புக் காகிதத்தில்
வரும்எஸ்.பி.பி.ஹிட்ஸ்...ஜேசுதாஸ் ஹிட்ஸ்புக்ஸை(!) வாங்கி, ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு தென்னந்தோப்புக்குப் போய் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். அங்கே
குளிக்க வரும் அத்தை பெண்களால் சாதகம் சிறிது பாதகம் ஆனாலும், கடும் முயற்சி என்பதில் ஐயமில்லை!
அப்போது என்.எஸ்.எஸ்.கேம்ப்பிற்காக ஒரு ஊருக்குப் போனோம். அங்கே இரவு கலைநிகழ்ச்சிகள் நடக்கும். அதில் பாட வாய்ப்புக் கேட்டேன். ஆசிரியர்முதலில் பசங்க
முன்னாடி பாடிக்காட்டு. நல்லாயிருந்தால் சான்ஸ் தர்றேன்என்றார். புதிதாகப் பாடுபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பாடவேண்டும் போலும்..நமக்கெப்படித் தெரியும்? நான் கண்ணைத் திறந்துகொண்டே பாடி, ஆடியன்ஸ் முகம் அஷ்டகோணலானதைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன். அத்துடன் பாடகர் லட்சியம் பாடையில் போனது!
பிறகு ஜெயகாந்தன் மாதிரி இலக்கியவாதி ஆவது என்று முடிவுசெய்தேன். கதைகளை எழுதி அனுப்பி குமுதம், விகடன் பத்திரிக்கை ஆபீஸ்களில் பூகம்பத்தை உண்டாக்கினேன். அடுத்த மூன்று, நான்கு வருடங்களுக்கு அது ஓடியது. இடையில் நைனா கூப்பிட்டு, ‘மவனே..இந்த எஞ்சினியர் டிகிரி ஒன்னு தான் நான் உனக்குத் தர்ற சொத்து..புரிஞ்சுக்கோ, பொழைச்சுக்கோஎன்று சொல்லிவிட்டார். உடனே எஞ்சினியர் ஆவது என் லட்சியம் ஆனது. இன்னும் நான்எஞ்சினியர்ஆகவில்லை என்றாலும், எஞ்சினியராக 15 வருடங்கள் குப்பை கொட்டிவிட்டேன்.
பையன் பாடகராகணும்னு ஆசைப்பட்டுட்டான் என்று என் அப்பாவும் ஒத்து ஊதியிருந்தால், இன்று நான் எந்த மூலையில் இருப்பேனோ தெரியாது. அல்லது என்னை இலக்கியவாதி ஆக்கியே தீருவது என்று இறங்கியிருந்தால், ஒரு ஜோல்னாப்பையுடன் ரெமி மார்ட்டின் தேடி அலைந்துகொண்டிருந்திருப்பேன். ‘குழந்தைகள் விருப்பம்..லட்சியம்என்பதெல்லாம் பணக்கார வீட்டுப்பசங்களுக்கு வேண்டுமானால் செல்லுபடியாகலாம். நமக்கு முதலில் புவாவிற்கு வழி செய்ய வேண்டும்; அதை விடுத்து லட்சியம் என்று இறங்க, நமக்கு கொடுப்பினை இல்லை!
சில குழந்தைகள் பிறப்பிலேயே ஸ்பெஷல் திறமையுடன் பிறக்கும். ஓவியம் வரைவது மாதிரித் திறமைகளுடன். அப்படி ஒரு 10% குழந்தைகள் வேண்டுமானால் பிறக்கலாம். அவர்களுக்கு வேண்டுமானால் மேலே சொன்ன விதி பொருந்தலாம். நம்மைப் போன்ற அதிஸ்பெஷல் ஆட்களுக்கு? (நமக்கு என்ன ஸ்பெஷல் திறமை என்று யோசித்தால், அது வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு டீசண்டாக இல்லையே!)
எனவேகுழந்தைகள் இஷ்டப்படியே விடுங்க சார்என்றால், ‘எதுக்கு, நாசமாப் போறதுக்கா?’ என்று தான் தோன்றுகிறது. ’இப்படியெல்லாம் எழுதினால் அறிவுஜீவிகளுக்கு கோபம் வந்துவிடுமே...எதற்கும் இதை போஸ்ட் செய்யும் முன் பையனிடம் கேட்டுவிடுவோம்என்று கேட்டேன் : மவனே, நீ என்னவாக ஆகப் போகிறாய்?
மகன்: கலெக்டர் ஆகப் போறேன்.
நான், நம் குலக்கொழுந்தா இப்படி என கண்கள் விரியஏன்ப்பா அப்படி?’ என்றேன்.
லிங்காவுல ரஜினி கலெக்டரா வந்தாருல்லஎன்றான்.
ஆஹா..அடுத்த வருசம் இவன்கபாலிஆகாமல் எப்படிக் காப்பாத்துவேன்???
ஆஸ்கார் போட்டியில்....காக்கா முட்டை:
அம்மா கேரக்டர் கவர்ன்மெண்ட் கொடுத்த இலவச டிவியை சுமந்துகொண்டு வருகிறது.
பசங்க அதைப் பார்த்து குஷியாகிடிவியாம்மா?’என்று கூடவே போகிறார்கள்.
வீட்டிற்குப் போனால், பாட்டி ஒரு இலவச டிவியுடன் உட்கார்ந்திருக்கிறார். ஒரு வீட்டிற்கு ரெண்டு டிவி என்று பசங்க ஜாலி ஆகிறார்கள்.
அப்போது பாட்டி கேட்கிறார் ‘(ரேசனில்)அரிசி வாங்கலியா?’
அம்மா பதில் : ஸ்டாக் இல்லையாம்மா!!
ஆடம்பரப் பொருளானா டிவி ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கிறது. அவசியப் பொருளான அரிசி இல்லை. இங்கே பொதுவாக சீன், புரட்சி மோடுக்கு மாறும். பாட்டி அரசை எதிர்த்து ஒரு புரட்சி வசனம் பேச வேண்டும்.
ஆனால் காக்கா முட்டையில் அந்தக் குடும்பம் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறது. அதுமட்டுமல்ல, டிவி வந்ததைக் கொண்டாடுகிறது. இது தான் தமிழகத்தின் உண்மை நிலை. அரசு மட்டுமல்ல, மக்களும் அரசின் குற்றத்தில் பங்காளிகளாகிவிட்ட அவலம்.
ஒருதுளிகூட ஓவர்டோஸ் ஆகாமல் இதைச் சொன்னதால்தான் இது உலக சினிமா. என் கவலையெல்லாம் ஆஸ்கார்காரனுக்கு இந்த சீன் புரியவேண்டுமே என்பது தான்!
ஆரஞ்சு மிட்டாய்:
தியேட்டரை விட்டு தெறித்து ஓடிவந்தோம் என்று சிலர் விமர்சனம் எழுதியபோதுகூட படம், இவ்வளவு மொக்கையாக இருக்கும் என்று நான் நம்பவில்லை.
என்ன நம்பிக்கையில் இப்படத்தை விஜய் சேதுபதி எடுத்தார் என்று தெரியவில்லை. நல்ல கதைக்கரு தான். ஆனால் படத்தில் வரும் கேரக்டர்கள் மீதோ, சீன்கள் மீதோ கொஞ்சமும் ஆர்வம் வரவில்லை.
சிறுபிள்ளைகள் பாரதி, கட்டபொம்மன் வேஷம் போட ஆசைப்படுவது போல், தன் அப்பா மாதிரி நடித்துப் பார்க்க வேண்டும் என்று விஜய் சேதுபதி ஆசைப்பட்டிருக்கிறார். அவரது ஆசை நிறைவேறியது ஒன்று தான் மிச்சம்.
மொக்கையான கமர்சியல் படத்தைக்கூட கலாய்த்துக்கொண்டே பார்த்துவிடலாம். ஆனால் மொக்கையான கலைப்படங்களைப் பார்ப்பது இருக்கே...அய்யய்யோ!
‪#‎போலி உலக சினிமா
------------------------------------------------
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சம் தலைவிரித்தாடும் நேரமிது. காமெடி நடிகர்கள் எல்லாம் ஈகோ பிரச்சினையால் ஹீரோ(!) ஆகிவிட, சென்ற தலைமுறைக் காமெடியன்கள் எந்தளவுக்கு தன்னைத் தாழ்த்திக்கொண்டு, நம்மை மகிழ்வித்திருக்கிறார்கள் என்று புரிகிறது.
தற்போதைய படங்களில் ரமேஷ் திலக் - ’பன்னி வாயன்யோகிபாபு ஜோடிக்கு காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. டிமாண்டி காலனி மற்றும் காக்கா முட்டை பார்க்கும்போது, நல்ல காமெடி கெமிஸ்ட்ரி இருவருக்கும் இடையில் இருப்பது தெரிகிறது.
இந்த ஜோடியை தமிழ் சினிமா சரியாக உபயோகப்படுத்தினால், அடுத்து பல வருடங்களுக்கு இவர்களின் ராஜ்ஜியம் நீடிக்கும்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.