Thursday, February 19, 2015

திரைக்கதை சூத்திரங்கள் -II-பகுதி-37

இதுவரை ப்ளேக் ஸ்னிடரின் பீட் ஷீட் பற்றி பார்த்துவந்தோம். இன்றைய பதிவில், அது எப்படி ஒரு படத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்று பார்ப்போம். ஏற்கனவே தொடரின் முதல் பாகத்திற்கு துப்பாக்கி படத்தை எடுத்துக்கொண்டது போன்றே, இப்போதும் துப்பாக்கி படத்தை எடுத்துக்கொள்வோம். இப்படி ஒரே படத்தைப் பார்ப்பதன் மூலம், நாம் இந்த தொடரில் வெறுமனே ஜல்லியடிக்கவில்லை என்றும் புரிந்துகொள்ளலாம்!!

இனி வருவது துப்பாக்கி படத்தின் காட்சிகளின் வரிசையுடன் பீட் ஷீட்: 

OPENING IMAGE:
1. ரயில்வே ஸ்டேசனில் ஹீரோவிற்காக, அவரின் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.

SET-UP:
2. ஹீரோ சிறு சண்டையுடன் அறிமுகமாகிறார், கூடவே ஒரு ஃபைட். ஹீரோ ஒரு ராணுவ வீரர், லீவில் ஊருக்கு வருகிறார்.
3. ஹீரோவை அழைத்துக் கொண்டு பெண் பார்க்கப் போகிறார்கள்.
4. பெண் பார்க்கும் படலம், ‘அப்பாவி’யான ஹீரோயின் அறிமுகம்
5. பெண் பிடிக்கவில்லை என ஹீரோ சொல்கிறார்.
6. நண்பர் சத்யனின் அறிமுகம்..’ஒவ்வொரு வருசமும் லீவ்ல வருவே...என் வேலைல மூக்கை நுழைப்பே..சப்-இன்ஸ்பெக்டர்ல இருந்து இன்ஸ்பெக்டர் ஆகிற என்னை, திரும்ப சப்-இன்ஸ்பெக்டராவே ஆக்கிட்டுப் போயிடுவே’(THEME STATED.)

7. பாக்ஸிங் வீராங்கனையாக ஹீரோயினை ஹீரோ பார்ப்பது..பாடல் (B STORY)
8. பெண் பிடித்திருப்பதாக ஹீரோ சொல்ல, ஹீரோயின் கடுப்பாவது. (B STORY)

CATALYST:
9. ஆட்டோவில் வரும் ஹீரோயின் ஹீரோவைப் பார்ப்பது..பைக் சாவியை ஹீரோயின் எடுத்துக்கொண்டு கிளம்புவது.
10. பஸ்ஸில் ஹீரோவின் பயணம்...ஒரு பயணியின் பர்ஸ் திருடு போவது..பயணிகளை ஹீரோவும் சத்யனும் செக் பண்ணுவது. அதைப் பார்த்து, ஒருவன் தப்பி ஓடுவது..ஆனால் அவன் திருடன் அல்ல; ஏன் ஓடுகிறான் என்று ஹீரோ யோசிக்கும்போது ‘டமார்’. குண்டு வெடிப்பு.

DEBATE:
11. ஹீரோ அவனைப் பிடித்து போலீஸில் ஒப்படைப்பது.
12. ஹாஸ்பிடலில் தீவிரவாதி...ஹாஸ்பிடல் வாசலில் இருக்கும் கடையில் டிவியில் ஹீரோ நியூஸ் பார்ப்பது.
13. மெயின் வில்லன் டிவியில் நியூஸ் பார்த்தபடி அறிமுகம்..ப்ளான் செய்தபடி திட்டத்தை நிறைவேற்றும்படி மெசேஜ் அனுப்புதல் (SET-UP)

BREAK INTO TWO:
14. ஹாஸ்பிடலில் இருந்த தீவிரவாதி தப்பிக்க முயற்சித்தல்..ஹீரோ அவனைப் பிடித்து தன் வீட்டில் அடைத்து வைத்திருப்பது. (சுவாரஸ்யத்திற்காக, இது முன்பின்னாக வரும்)

FUN & GAMES:
15. தீவிரவாதியிடம் விசாரணை. தான் தப்பிக்க உதவியது செக்யூரிட்டு சீஃப் என்று சொல்வது.
16. செக்யூரிட்டி சீஃப் வீட்டில் விஜய். அவரிடம் விசாரணை. ‘பெரிய ஆபத்தை தொட்டுட்டே’ என்று சொல்லியபடி செக்யூரிட்டி சீஃப் தற்கொலை செய்துகொள்வது. 
17. வீட்டின் மாடியில் தீவிரவாதியுடன் விஜய்..அவன் பேக்கில் இருக்கும் பொருட்களை ஹீரோ செக் செய்வது. அதில் இருக்கும் ஒரு பேப்பரில் 12 புள்ளிகள். அதை இணைத்து, மும்பை மேப்பில் வைத்துப் பார்ப்பது..தீவிரவாதிகளின் திட்டம் புரிகிறது. ‘மும்பை சிட்டியில் 12 இடத்தில் அட்டாக்’. இன்று 24ம் தேதி...27ல் அட்டாக் என்று தீவிரவாதி சொல்வது.
18. வில்லனுக்கு ‘தப்பித்தவன் வந்து சேரவில்லை. போலீஸ் தவிர்த்து வேறு யாரோ பிடித்து வைத்திருப்பதாக’ மெசேஜ் வருகிறது.

B STORY:
19. ஃப்ரெண்ட் கல்யாணத்தில் ஹீரோயின்..ஃப்ரெண்ட் ஒரு சொட்டைத்தலையனை கல்யாணம் செய்துகொள்வது. ஹீரோயின் மனமாற்றம்.
20. சத்யனுடன் ஹீரோ..செக்யூரிட்டி சீஃபைக் கொன்றது தான் தான் & தீவிரவாதி தன்னிடம் இருப்பதை ஹீரோ சொல்ல வரும்போது....ஹீரோயின் வருகை.
21. ஹீரோயின் ஐ லவ் யூ சொல்வது. ஹீரோ காமெடிக்காக மறுப்பது. வேறு மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லிவிட்டதாக ஹீரோயின் சொல்வது.
22. அந்த மாப்பிள்ளை ஜெயராம்..ஹீரோவின் உயரதிகாரி. காமெடி சீன்.
23. ஜெயராமின் கெட் டூ கெதர் பார்ட்டி...பாடல்.

FUN & GAMES:
24. ஹீரோ வீட்டில் சத்யன்..தீவிரவாதியை பீரோவில் அடைத்து வைத்திருப்பதை சத்யனுக்கு விஜய் காட்டுவது.
25. ஃப்ரெண்ட் கல்யாண சீன்...பெண்-மாப்பிள்ளை கிஸ் பண்ணிக்கொள்வது..எல்லோரும் ஃபோட்டோ எடுத்துக்கொள்வது. ஒரு கேம் விளையாட விஜய், தன் பேட்ச் மேட்ஸை அழைப்பது.
26. ஹீரோ வீட்டுவாசலில் தன் டீமுடன் ஹீரோ...தன் ப்ளானை விவரிப்பது. தீவிரவாதி தப்பித்து வருவது.
27. ஸ்லீப்பர் செல்லை ஹீரோ&டீம் ஃபாலோ செய்வது...படத்தின் பெஸ்ட் சீகுவென்ஸ்..ஸ்லீப்பர் செல்லை ஹீரோவின் டீம் போட்டுத்தள்ளுவது.

MID POINT:
28. டிவிகளில் நியூஸ்..அதை ஹீரோ தன் வீட்டில் பார்ப்பது..வில்லனின் தம்பி சுட்டுக்கொல்லப்பட்டதை வில்லனும் தன் வீட்டில் பார்ப்பது.
29. வில்லன் ஒரு ஜாயின் செக்ரட்டரியிடம் பேசுவது. ஒரு ஃபோனை மட்டும் காணோம் என்று அவர் சொல்வது.
30. அந்த நம்பருக்கு வில்லன் ஃபோன் செய்ய, ஹீரோ எடுப்பது...’I AM WAITING'. - இடைவேளை.

B STORY:
31. விஜய் தூங்கிக்கொண்டிருக்க, ஹீரோயின் ஃபோன் செய்து ‘ஜெயராம் கூப்பிடுவதாகச் சொல்வது..
32. ஜெயராமுக்கு ஒரு ஐட்டத்தை ஹீரோ-ஹீரோயின் இருவரும் செட் செய்வது.

BAD GUYS CLOSE IN:
33. வில்லனின் மும்பை வருகை...கோட் சூட்டை வைத்து, கல்யாண ஃபங்சனாக இருக்கலாம் என வில்லன் அனுமானிப்பது.
34. ஹீரோ ஸ்லீப்பர் செல் பற்றி சத்யனிடம் விஜய் விளக்குவது. ஸ்லீப்பர் செல்லின் லீடர் தன்னைத் தேடி வருவான் என்று ஹீரோ சொல்வது.
35. ஜெயராம் வீட்டில் விஜய்-ஹீரோயின்...மாமா பெண்ணை கட்டிக்கப்போவதாக ஜெயராம் சொல்வது. காமெடி சீன் (FUN & B STORY)
36. கூகுள் பாடல்..ஹீரோயின் கிஸ் கேட்க, ஹீரோவுக்கு திருமண கிஸ் & கோட் சூட் ஞாபகம் வருவது. (B STORY - CONNECTS WITH A STORY)
37. சர்ச்சுக்கு ஹீரோ & சத்யன் பயணம்..அதற்கு முன் வில்லன் அங்கே!
38. மாப்பிள்ளை வீட்டில் வில்லன்..சர்ச்சில் ஹீரோ..மாப்பிள்ளை வீட்டில் கல்யாண ஆல்பத்தைப் பார்க்கும் வில்லன்...அங்கே 5 ஆர்மி டீம் ஃபோட்டோக்கள்..ஜோயல் ப்ரதரின் வருகை..அனைவரையும் வில்லன் சுட்டுக்கொள்வது.
39. ஹீரோவின் லேட் வருகை..கல்யாண ஆல்பத்தை ஹீரோவும் பார்ப்பது..டீமுக்கு ஒருவரை ஃபோட்டோவில் ரவுண்ட் செய்திருக்கிறார்கள்.
40. ஹீரோ ரவுண்ட் செய்யப்பட்ட ஆட்களுக்கு ஃபோன் செய்வது..அங்கே அனைவரும் நலம்.
41. ஹீரோ வெயிட்டிங்...ஒரு ஆர்மி மேனின் ப்ரதரின் மகள் கடத்தப்பட்டதாக ஃபோன் வருகிறது. ஹீரோ சத்யனுக்கு ஃபோன் செய்து, ரவுண்ட் செய்யப்பட்ட ஆர்மி மேன்களின் வீட்டுப் பெண்களின் ஃபோன் நம்பரை ட்ராக் செய்யச் சொல்வது.
42. ஹீரோ தன் தங்கைக்கு ஃபோன் செய்வது...சத்யன் நம்பர்ஸை ட்ராக் செய்வது.-இன்னொரு பெண் கடத்தப்படுவது-சத்யனை எதுவும் செய்யாமல் வரும்படி ஹீரோ அழைப்பது-4வது & 5வது பெண்களும் கடத்தப்பட்டதாக செய்தி- தன் தங்கச்சியும் கடத்தப்பட்டதாக ஹீரோ சொல்வது..ஃப்ளாஷ்பேக்கில் அந்த ஷாட்ஸ்.
43. ஹீரோ வளர்க்கும் நாய் வருகை - தங்கச்சியின் துப்பட்டாவை வைத்து நாய் மோப்பம் பிடிப்பது.
44. வில்லனின் இடத்தில் கடத்தப்பட்ட பெண்கள்..ஒவ்வொரு ஃபோட்டோவாகக் காட்டி வில்லன்கள் விசாரிப்பது. விஜய்யின் தங்கை மட்டும் ‘ஃபோட்டோவில் இருப்பது தன் அண்ணன் அல்ல’ என்று சொல்வது-குரூப் ஃபோட்டோவில் விஜய்யை அடையாளம் காட்டுவது. வில்லனுக்கு ஃபோன் - அந்த இடத்தை காலி செய்யும்படி வில்லன் சொல்வது.
45. விஜய் எண்ட்ரி - ஃபைட். வில்லனின் அடியாளை காரில் டிக்கியில் போட்டுக்கொண்டு, மீட்கப்பட்ட பெண்களின் விஜய் வெளியேறுதல்.
46. அடியாட்களின் இடத்தில் வில்லன்..மீண்டும் ஃபோட்டோக்களை ஓட்டிப்பார்ப்பது-விஜய் டீமின் ஃபோட்டோ வில்லனுக்கு கிடைப்பது.
47. காரில் விஜய் தங்கை, விஜய்யைத் திட்டுவது.- இன்னொரு மெயின் வில்லன் இருப்பதை விஜய் அறிவது.

B STORY:
48. பிடிபட்டவனை விஜய் பீரோவில் அடைத்து வைப்பது-ஹீரோயின் வருகை.-சத்யன் வருகை.- பாடல்

ALL IS LOST:
49. வில்லனின் அடியாளை ஹீரோ கொன்று போட்டிருப்பதை வில்லன் நியூஸில் பார்ப்பது. அந்த டீமை பெரிதாக அட்டாக் செய்யும்படி ஜாயின் செக்ரட்டரி வில்லனிடம் சொல்வது.
50. ஹீரோவுக்கு வில்லன் ஃபோன் செய்வது - ஹீரோவின் ஃப்ரெண்ட் இன்னும் 10 செகண்ட்ஸில் சாவான் என்று வில்லன் சொல்வது - ஹீரோ அங்கே கால் செய்யும்போது, அங்கே பாம் வெடிக்கிறது. மீதி 10 பேரும் இருக்குமிடத்தை வில்லனே சொல்வது. தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால், அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டுவது. ஹீரோ வில்லனுக்கு அடிபணிதல்...ஆல் இஸ் லாஸ்ட்.

DARK NIGHT OF SOUL:
51. மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் உதவியை ஹீரோ நாடுதல். ஹீரோவின் உடலில் சிப்புடன், தான் வில்லனை சந்தித்த 15வது நிமிடம் பாம் வெடிக்க வேண்டும் என்று ஹீரோ திட்டமிடுவது.
52. சத்யன் ஹீரோவிடம் வேண்டாம் என்று சொல்வது..ஹீரோ ராணுவ/போலீஸ் அதிகாரிகளின் தியாகத்தைச் சொல்வது.
53.  ஹீரோயினிடம் ஹீரோ கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது.-வீட்டில் ஃபேமிலி ஃபோட்டோக்களை ஹீரோ பார்ப்பது.

BREAK INTO THREE:

54. ஹீரோ உடலில் சிப்-ஐ செலுத்திக்கொண்டு கிளம்புதல் - வில்லன் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் சொல்லும் வாகனத்தில் செல்வது. ஹீரோவின் ஆள் பாமுடன் கிளம்புதல். சத்யன் ட்ராக் செய்தல்.

FINALE:
55. கப்பலில் வில்லனை ஹீரோ மீட் செய்தல்.  ஹீரோ நிறுத்திய கார்களில் பாம் இருப்பதை வில்லன் சொல்வது. அதை வைத்தது விஜய் தான் என்று போலீஸ்க்கு இன்ஃபர்மேசன் கொடுப்போம் என்று வில்லன் சொல்வது. ஜாயின் செக்ரட்டரி மூலம் ஆர்மிக்குள்ளேயே ஸ்லீப்பர் செல் நுழையும் என்று வில்லன் விளக்குவது. ஹீரோவின் ஆள் கப்பலில் பாம் செட் செய்தல். ஹீரோ தப்பித்தே ஆக வேண்டும்.
56. கிளைமாக்ஸ் ஃபைட். வில்லன் & ஜாயின் செக்ரட்டரி சாவது.

FINAL IMAGE:
57. ரயில்வே ஸ்டேசனில் ஹீரோ - ஜெயராமுக்கு உண்மை தெரிவது-ஆர்மி தான் கிரேட் என சத்யன் பேசுவது.- ஹீரோ & டீம் ஆர்மிக்குத் திரும்புவது!
--------------------------------------------------------





பீட் ஷீட் பற்றிய பதிவுகளில் சொன்னவற்றையும் இந்தக் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், உங்கள் ஒன்லைன் ஆர்டரை எப்படிச் சரி செய்வது என்பது உங்களுக்கே தெளிவாகத் தெரியும். இந்த பீட் ஷீட்டில் உள்ள சில விஷயங்களுக்கு உங்கள் கதையில் இடம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் சுவாரஸ்யமாகக் கதை சொல்ல, இந்த பீட் ஷீட் உத்தரவாதம் அளிக்கும்.

இதுபற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில்...

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. நன்று!படம் பார்த்த பீலிங்!

    ReplyDelete
  2. அருமையாக விரிவாக அழகாக அலசியிருக்கீங்க...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.