Thursday, February 12, 2015

அனேகன் - திரை விமர்சனம்

வி.ஐ.பிக்கு அடுத்து தனுஷின் நடிப்பில், கே.ஆவி. ஆனந்த இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் அனேகன். மறுஜென்மக் கதை, ஐந்து கெட்டப், கார்த்திக் ரீஎண்ட்ரி என படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டிய விஷயங்கள் பல..எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

ஒரு ஊர்ல :
ஹீரோயினுக்கு முன் ஜென்ம ஞாபகங்கள் பீறிட்டுக் கிளம்புகின்றன. எல்லா ஜென்மத்திலும் தனுஷை லவ்வுவதும், வில்லன்கள் பிரித்துக் கொல்வதுமாக இருக்கிறார்கள். இப்போது மீண்டும் சென்னையில் அதே தனுஷ்..அதே வில்லன்கள்..அதே காதல்..இந்த ஜென்மத்திலாவது......?

உரிச்சா:
சென்னையில் வாழும் ஹீரோயினுக்கு ‘ஒரு காரணத்துடன்’ முன் ஜென்ம ஞாபகங்கள் வர ஆரம்பிக்கின்றன. பர்மாவில் 1962ல் கதை விரிகிறது. அங்கே ஒரு ஆபத்தில் தனுஷ் ஹீரோயினைக் காப்பாற்ற, லவ் ஆகிறது. அதை பணக்கார அப்பா எதிர்க்க, உருக்கமான முடிவுடன் அந்த எபிசோடு முடிகிறது. இப்போது அதே பணக்கார அப்பா, ஹீரோயினுக்கு மாமாவாகப் பிறந்திருக்கிறார். பர்மாக் காட்சிகளில் ஹீரோ காப்பாற்றும் சீன், இறுதி கபல் சீன் தவிர்த்து மற்றவை சாதாரணமாக நகர்கின்றன. ’லவ் பண்றாங்க, சாகுறாங்க’ என்பதைத் தாண்டி அங்கே சுவராஸ்யமாக ஒன்றுமே இல்லை.

ஹீரோயினின் முன் ஜென்மக் கதையை யாரும் நம்பாதபோது, ‘தற்கால’ தனுஷ் அதே ஐ.டி.கம்பெனியில் ஜாயின் செய்கிறார். கம்பெனிக்கு ஓனர், கார்த்திக். ஹீரோயினின் கதையை தனுஷும் கண்டுகொள்ளாமல்விட, இன்னொரு ஜென்மக் கதையை ஓப்பன் செய்கிறார் ஹீரோயின். 25 வருடங்களாக சால்வ் பண்ண முடியாத ஒரு போலீஸ் கேஸை ஹீரோயின் தீர்த்துவைக்கிறார். அந்த கேஸ் தான் இன்னொரு ‘தனுஷ்-அமைரா(ஹீரோயின்)’ கதை. அதே காதல், அதே முடிவு. கொஞ்சம் ட்விஸ்ட்டுடன்.

இப்போது அந்த 25 வருடக் கதையின் வில்லன், இவர்களைக் குறிவைக்கிறான். இந்த ஜென்மத்திலாவது காதல் ஜெயிக்குமா எனும் பயங்கர ரகசியத்தை இழுத்துச் சொல்லி முடிக்கிறார்கள்.

படத்தின் இரண்டு முன் ஜென்ம எபிசோடுகளும் சவசவ என்று நகர்வது தான் பெரும்பிரச்சினை. 1960/1980களில் நடக்கும் சம்பவங்கள் என்பதற்காக, அந்தக் காலத்தைய படம் மாதிரியே சீன் வைத்தால் எப்படி பாஸ்? ஆனால் தற்போதைய காலகட்ட சீன்கள், ஒரு த்ரில்லர் மாதிரி விறுவிறுப்பாக நடக்கின்றன. இண்டர்வெல்வரை பில்டப்பை பயங்கரமாக ஏற்றிவிடுகிறார்கள். ஆனால் வில்லன் யார் என்று தெரியும்போதும், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களும் அந்த பில்டப்பிற்கு ஏற்ற அளவில் இல்லை.

ஒரு ஜென்மத்தில் வில்லனாக வருபவர்கள், இன்னொரு ஜென்மத்தில் நல்லவர்களாக வரும்போது, நமக்கே கொஞ்சம் கிர்ரென்று தான் இருக்கிறது. கிளைமாக்ஸையும் லாஜிக்கே இல்லாமல் ஹீரோ-ஹீரோயின் - வில்லனை ஒரே இடத்திற்குக் கொண்டுவந்து இழுத்து முடிக்கிறார்கள்.

செமயான கான்செப்ட், அட்டகாசமான பாடல்கள், வழக்கம்போல் தனிஷ் மற்றும் கார்த்திக்கின் அருமையான நடிப்பு, லாஜிக்கான வில்லன் கேரக்டர், செமயான சில சீன்கள்(லிஃப்ட் சீன், பேய்(?) வரும் சீன்) என எல்லாம் இருந்தும்....ஏதோ ஒன்று மிஸ் ஆவது போன்றே ஒரு ஃபீலிங்.

தனுஷ்:
பர்மா ஏழை, ஐடி இளைஞன், சென்னை ரவுடி, ஒரு பாடலில் மன்னன் என நடிப்புக்குத் தீனி போடும் வெரைட்டியான கேரக்டர்கள். தனுஷும் புகுந்து விளையாடுகிறார். சென்னை ரவுடி கேரக்டரில் தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார். ‘டங்கா மாரி’க்கு தியேட்டர் அதிர்வது நிச்சயம். ஆனால் கெட்டப் எதுவுமே ஒட்டவில்லை, பார்க்க நன்றாகவும் இல்லை.

கார்த்திக்:
ரொம்ப நாளைக்கு அப்புறம், நவரச நாயகனின் அதிரடி. வயதானாலும் அதே துள்ளலுடன் வருகிறார். ஹிப்னாடிஸ சீனில் ஹீரோயின் கதையை உட்கார்ந்து கேட்கும்போது பார்வையிலேயே அசத்துகிறார். முகத்தில் இப்போது கொஞ்சம் முத்துராமன் சாயல் தெரிகிறது. எலக்சன் டைம் தவிர்த்து மற்ற நேரங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக ஒரு ரவுண்ட் வரலாம். எலக்சன் டைமில், ஒன்லி காமெடி ரோல்!


அமைரா:
தமிழ் சினிமாவிற்கு இன்னொரு நல்ல ஹீரோயின். மனிஷா கொய்ராலா மாதிரி முகச் சாயல், ஆனால் அந்த சிரிப்பு மிஸ்ஸிங். தனுஷுக்கு இணையாக நான்கைந்து வேடங்களில் வரவேண்டிய கட்டாயம். முதல் படமாக இருந்தாலும், சளைக்காமல் நடித்திருக்கிறார். கதையே இவரை மையமாகக் கொண்டு நகர்வதால், அதிகம் ஸ்கோர் செய்கிறார். அழகான, நடிக்கத் தெரிந்த நடிகைகள் வரிசையில் ஒரு புது வரவு.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- சவசவ என நகரும் காட்சிகள்
- இரண்டு முன் ஜென்மக் கதைகளிலே கற்பனை வறட்சி.
- சும்மாவே சுபா & ஆனந்த் கோஷ்டி நீளமாகக் கதை சொல்வதில் வல்லவர்கள். இதில் நான்கைந்து ஜென்மங்கள் வேறு.கேட்கணுமா? இரண்டே முக்கால் மணி நேரம்!
- காமெடி என்று பெரிதாக ஏதும் இல்லை
- லாஜிக் கன்னாபின்னாவென்று உதைக்கிறது. பர்மா தனுஷ் ஏன் சென்னை வில்லனைக் கொல்ல, கிளைமாக்ஸில் வருகிறார்?
- ஒரு ஜென்மத்தில் கெட்டவன், அடுத்த ஜென்மத்தில் நல்லவனாக இருப்பது லாஜிக் & ட்விஸ்ட் தான். ஆனால் அதுவே குழப்பத்தை உண்டாக்குகிறது.
- போதை மருந்து விற்கத் தயங்காத ஹிப்னாடிஸ டாக்டர், திடீரென நல்லவர் ஆவது
- தனுஷைக் கொல்ல சான்ஸ் இருந்தும், வில்லன் மிஸ் பண்ணி..கிளைமாக்ஸில் படத்தை முடிப்பது!!
- வில்லனைக் கொல்ல ஏன்யா அவ்ளோ தயக்கம்...மரத்துமேல கத்தியைச் சொருகி...முடியல!
- போதை மருந்தையும் முன் ஜென்ம நினைவையும் கலந்துகட்டி, இரண்டினால் வரும் விளைவுகளையும் ஹீரோயின் சொல்வதால், பாதி உண்மையாகவும் பாதி கற்பனையாகவும் சீன்கள் வருகின்றன. அதை எல்லாத் தரப்பு ஆடியன்ஸும் புரிந்துகொள்வார்களா?

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- தனுஷ் & கார்த்திக்
- ஃப்ரெஷ்ஷான ஹீரோயின் (ஹிஹி)
- திகிலைக் கூட்டும் ஐ.டி. கம்பெனி சீன்கள்
- புதுமையான மறுஜென்மக் கான்செப்ட். அது உண்மையா, ஹீரோயினின் கற்பனையா எனும் டைலம்மாவிலேயே ஆடியன்ஸை இண்டர்வெல்வரை வைத்திருப்பது
- வில்லனுக்குக்கூட லாஜிக்கான ஒரு காரணத்தைக் கொடுத்தது
- டங்கா மாரி உட்பட எல்லாமே சூப்பர்ஹிட் பாடல்கள். எடுத்த விதமும் அருமை. ஹாரிஸ் ஜெயராஜ் கலக்கிவிட்டார்.

பார்க்கலாமா? 
வித்தியாசமான முயற்சி....பார்க்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

  1. பாக்கலாம்ன்னு சொல்ற வரியில இம்புட்டு நீளமா?

    ReplyDelete
    Replies
    1. இப்போது மாற்றிவிட்டேன் தமிழ்வாசி....பார்க்கலாம்.

      Delete
  2. பார்ப்போம்..........ஹி!ஹி!!ஹீ!!!!

    ReplyDelete
  3. boss நீங்க சொல்றத பார்த்தால் the fountain and cloud atlas movies oda கலவை போல இருக்கே ? feeling sad..........

    ReplyDelete
  4. "எல்லா ஜென்மத்திலும் தனுஷை லவ்வுவதும், வில்லன்கள் பிரித்துக் கொல்வதுமாக இருக்கிறார்கள்"

    செத்து செத்து விளையாடுவோம்னு வடிவேலு காமெடி பண்ண கான்செப்ட் வெச்சி ,

    செத்து செத்து லவ் பண்ணுவோம் னு அனேகன் எடுத்திருக்காங்க .

    நீங்க வேற atlas . hercules னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு .

    ReplyDelete
  5. ஏன்யா , ஹீரோயின் நல்லா தானே இருக்கு . அத போயி மனிஷா கொய்ராலா மாதிரி இருக்குதுன்னு பீதிய கெளப்பிவிட்டு
    மார்கெட் போக வெச்சுடாதையா.

    ReplyDelete
  6. திரும்பவும் முன்ஜென்மக் கதையா..? இரண்டாம் உலகம் பார்ட் -2 ஆக இல்லாமல் இருந்தால் சரிதான்.. உங்கூர்ல நேத்திக்கே ரிலீஸ் பண்ணிட்டாங்களா தல.?. நமக்குதான் செய்வினை வச்சிட்டாங்க...

    ReplyDelete
  7. படத்துல காமெடிக்குப் பஞ்சமா? ஐயே...!

    ReplyDelete
  8. முயற்சி புதிது.வசனங்கள் நச்.நாயகி...........நடிப்பு சொல்லிக் கொடுத்து வருவதல்ல என்று நிரூபித்திருக்கிறார்.படக் கோர்ப்பு(தமிழில்,எடிட்டிங்)கச்சிதம்.மொத்தத்தில் கூட்டணி ...................வெற்றி!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.