Friday, May 23, 2014

கோச்சடையான் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படமும் கோச்சடையான் அளவிற்கு கேலிக்கு ஆளானதில்லை. பலவருட தயாரிப்பு, சுல்தான் தான் கோச்சடையான் - ராணா தான் கோச்சடையான் என ஏகப்பட்ட வதந்திகள், பொம்மைப் படம் எனும் குறை படத்தை ரிலீஸ் செய்வதில் எழுந்த சிக்கல்கள் என சூப்பர் ஸ்டாரே வெறுத்துப்போய் லிங்கா ஆகிவிட்டார். அப்படி ரிலீஸ்க்கு முன்பே புகழ்பெற்ற படம், இன்று ரிலீஸ் ஆகிவிட்டது. எப்படி இருக்குன்னு......

ஒரு ஊர்ல..:
கோட்டையபட்டினம் நாட்டின் தலைமைத்தளபதி கோச்சடையான். தன் படைவீரர்களைக் காக்க அவர் செய்யும் ஒரு செயலால், தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறார். கோச்சடையானின் மகன் ராணா அவர் மீதான பழியை நீக்கி, பழிவாங்குவதே கதை. (அப்போ இந்தப் படம் ராணா தானேன்னு கேட்கக்கூடாது)

உரிச்சா....:
முதலிலேயே சொல்லிவிடுகிறேன்...நாம் பயந்த அளவிற்கு படம் மோசம் இல்லை.

படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திற்கு ‘இது ரஜினி தானா? சரத்குமார் தானா? தீபிகா தானா?’ என்று நம் மனம் ஆராய்ச்சியில் இறங்குவது வாஸ்தவம் தான். உயிரோடு இருக்கும் ஆட்களின் தோற்றத்தில் பொம்மைகள் நடமாடும்போது, நாம் கம்பேர் பண்ணுவது இயல்பு தான். ஆனால் முதல் அரைமணி நேரத்தில் ‘ஓகே’ என்று செட்டில் ஆகிவிடுகிறோம்.
சிறுவன் ராணா கோட்டயப்பட்டினம் நாட்டில் இருந்து, அவர்களின் எதிரி நாடான கலிங்கபுரிக்கு போவதில் ஆரம்பிக்கிறது படம். அங்கே வளரும் ராணா, தன் வீரத்தால் படைத்தளபதியாக ஆகிறார். மனதிற்குள் ஒரு திட்டத்தோடு காய் நகர்த்தி, அந்த நாட்டின் மன்னன் ஜாக்கிசெராப் - இளவரசர் ஆதியை ஏமாற்றி, தான் நினைத்தபடியே கோட்டயப்பட்டினத்திற்கு ஒரு வீரனாகத் திரும்பி வருகிறார். 

கலிங்கபுரியில் மாமா நாகேஷ் (ஆம், அவர் கேரக்டரையும் பொருத்தமாக உருவாக்கியிருக்கிறார்கள்) கோச்சடையானின் தங்கையை வளர்த்து வருகிறார். கோச்சடையானின் அண்ணன் சிறுவயதிலேயே காணாமல் போய் விட்டதாகச் சொல்கிறார் நாகேஷ். ராணாவின் தங்கையை இளவரசர் சரத் குமார் காதலிக்க, இளவரசி தீபிகா படுகோனே ராணாவை காதலிக்கிறார். இந்த பண்டமாற்று முறை அரசர் நாசரை கடுப்பேற்றிவிடுகிறது. கூடவே ராணாவின் பழி வாங்கும் கதையும் சேர்ந்துகொள்ள, படம் அதன்பின் ஜெட் வேகத்தில் செல்கிறது.

உண்மையில் இந்தப் படத்தைக் காப்பாற்றுவது கே.எஸ்.ரவிகுமாரின் கதை-திரைக்கதை-வசனம் தான். கதை வலுவாக இருப்பதால், கொஞ்ச நேரத்திலேயே அனிமேசன் படம் என்பதை மறந்து படத்தில் ஒன்றிவிடுகிறோம்.இது அனிமேசன் இல்லை, மோசன் கேப்சரிங் டெக்னாலஜி என்றெல்லாம் சொல்கிறார்கள். நம் சிற்றறிவுக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. சில இடங்களில் முகத்தில் உணர்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதைத் தான் சொல்கிறார்களோ, என்னவோ. நமக்கு எல்லாமே பொம்மை தான்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசையும் பாடல்களும் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கின்றன என்றே சொல்லலாம். மெதுவாகத்தான், கண்ணே கனியே, சில்லென்ற என எல்லாமே அட்டகாசமான பாடல்கள். காட்சிப்படுத்திய விதமும் பிண்ணனிக் காட்சிகளும் நன்றாகவே வந்திருக்கின்றன. படத்தின் ட்ரைலரும் பாடல் டீசரும் மொக்கையாகத் தெரிந்தன. ஆனால் தியேட்டரில் நன்றாகவே இருக்கின்றன. 

அனிமேசன் கேரக்டர்களில் சூப்பர் ஸ்டார், நாசர், சோபனா, ஆதி உருவங்கள் அருமை. சரத் குமார், ஜாக்கி செராஃப் உருவங்கள் பரவாயில்லை. ஆனால் மிகவும் மோசம், தீபிகா படுகோனே மற்றும் தங்கையாக வரும் ருக்மிணி(பொம்மலாட்டம் ஹீரோயின்), சண்முகராஜா உருவங்கள் தான். அதிலும் தீபிகாவை க்ளோசப்பில் காட்டும்போது.......ஆத்தீ! 

அதென்னவோ தெரியவில்லை, எல்லா சரித்திரப்படங்களிலும் மன்னன் மகளையே ஹீரோக்கள் லவட்டுகிறார்கள். அந்தக் காலத்திம் நம் மன்னர்களுக்குப் பெரும் தலைவலியாக இந்தப் பிரச்சினை இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அவதார் படத்தின் பட்ஜெட்டும் அவர்களின் டெக்னிகல் வசதிகளும் கோச்சடையானை விட, பலமடங்கு அதிகம். எனவே அதனுடன் இந்த ’ஸ்லோ’ மோசனை கம்பேர் செய்வது நியாயம் அல்ல. ஆனாலும் இந்திய சினிமா வரலாற்றில் இது புதிய தொடக்கமாக அமையலாம். அந்தவகையில் சௌந்தர்யாவின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இதுவரை அனிமேசன் படங்களுக்கென்று, தமிழ் சினிமாவில் மார்க்கெட் கிடையாது. இனி அது உருவாகலாம்.  அதே போன்றே மற்ற ரஜினி படங்களை நினைத்துப் பார்த்தாலும் கஷ்டம் தான். இரண்டு மணிநேரத்தில் படம் முடிவது, இன்னொரு ஆறுதல்.

கிளைமாக்ஸில் ராணா தன் தாயின் சபதத்தை நிறைவேற்றிவிடுகிறார். ஆனால் அதனாலேயே தந்தை கோச்சடையானின் சபதத்தை மீறிவிடுகிறார். படத்தின் இறுதிக்காட்சியில் காணாமல் போன அண்ணன் சோணா (அதுவும் ரஜினி தான்) வந்து நிற்கிறார். தம்பியும் அண்ணனும் மோத வேண்டிய சூழலில்.........தொடரும் போட்டு விடுகிறார்கள். சோ, இன்னொரு பாகமும் வரலாம்!
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- படத்தைப் பற்றி நெகடின் இமேஜ் வரும் அளவிற்கு படத்தை உருவாக்க நேரம் எடுத்துக்கொண்டது
- படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல், கேப்டன் கூட்டணிப் பேச்சுவார்த்தை போல் விளையாட்டு காட்டியது
- மூலம் வந்தவங்க மாதிரி, காலை அகட்டி அகட்டி பல கேரக்டர்கள் நடப்பது
- என்ன இருந்தாலும், இது சூப்பர் ஸ்டார் படம் இல்லை 

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நச்சென்று எழுதப்பட்டிருக்கும் வசனங்கள்
- போரடிக்காமல் நகரும் திரைக்கதை
- கோச்சடையான் ஃப்ளாஷ்பேக்
- ஏ.ஆர்.ரஹ்மான்
- ரசிக்க வைத்த நாகேஷ்

பார்க்கலாமா? :
அதிகம் எதிர்பார்க்காமல் இது பொம்மைப் படம் என்ற புரிதலுடன் போனால், ஒருமுறை பார்க்கலாம். 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

  1. முதல் விமர்சனம் உங்களுடையது ,

    முதல் கமெண்ட் என்னுடையது .

    ReplyDelete
  2. @வானரம் . இதெல்லாம் சரித்திரத்துல வரும்.

    ReplyDelete
  3. //சோ, இன்னொரு பாகமும் வரலாம்!//அடங்கொன்னியா!! இனி அதுக்கு வேற வெயிட் பண்ணனுமா.. ஆழ விடுங்கடா சாமி!

    ReplyDelete
  4. தீபிகா படுக்கவாநீ ( ஸ்பெல்லிங் கரக்டா அண்ணே ) கோடி ஓவா கொடுத்து கூட்டி வந்து பொம்மையா 'நடிக்க' வச்சதுக்கு பதிலா பட்டத்து யானை படத்துல நடிச்ச
    ஐஸ்வர்யா ( எவன்டா இந்த பேர வச்சது ) நடிக்க வச்சிருக்கலாம் .
    அது மூஞ்சி அனிமேசன் பண்ண மாதிரி தான் இருக்கும் .

    ReplyDelete
  5. நாகேஷை அனிமேசன் கேரக்டரில் பார்க்க ஆசையா இருக்கு ,
    டிவி யில் போடும் போது
    பாத்துக்கலாம் .

    ReplyDelete
  6. அப்படியா இங்கு நெட்டில் வந்தால் பார்ப்போம் தியேட்ட்ரில் இப்ப ரயிலில் போக நேரமாற்றம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  7. சோ, இன்னொரு பாகமும் வரலாம்!/கடவுளே கடவுளே!ம்ம்

    ReplyDelete
  8. "ராணாவின் தங்கையை இளவரசர் சரத் குமார் காதலிக்க, இளவரசி தீபிகா படுகோனே ராணாவை காதலிக்கிறார்"

    இந்த கதையை கிரி படத்துல இருந்து காப்பியடிசுட்டாங்க.
    கணபதி ஐயர்,வடிவக்கா ( வடிவேல் அக்கா ), பேக்கரி, வடிவேலு கேரக்டர்களை அப்படியே அமைத்திருக்கிறார்கள் .
    பட் இந்த டீலிங் நமக்கும் புடிக்கிற மாதிரி தான் இருக்கு .

    ReplyDelete
  9. இந்த கதையை எதனால் மோஷன் கேப்ச்சரில் எடுத்தார்கள்? சாதாரணமாகவே எடுத்திருக்கலாமே! கதைக்கு தேவைப் பட்டால் டெக்னாலஜி உபயோகிக்கலாமே தவிர இந்த கடைக்கு எதற்கு?

    ReplyDelete
  10. "கோச்சடையானின் மகன் ராணா அவர் மீதான பழியை நீக்கி, பழிவாங்குவதே கதை"

    இந்த கதைக்கா இத்தனை கோடி செலவு பண்ணாங்க ?
    இதுல ரெண்டாம் பாகம் வேற வரும் போல .

    ReplyDelete
  11. //இந்த கதையை எதனால் மோஷன் கேப்ச்சரில் எடுத்தார்கள்? சாதாரணமாகவே எடுத்திருக்கலாமே! கதைக்கு தேவைப் பட்டால் டெக்னாலஜி உபயோகிக்கலாமே தவிர இந்த கடைக்கு எதற்கு?//

    மோஷன் கேப்சர் - ரஜினியின் காலத்திற்குப் பின்னும் அதாவது டிஜிட்டல் உள்ள வரையிலும் அதனை உபயோகபடுத்திக் கொள்ளலாம். ஒருமுறை தான் மனித உழைப்பு அதன்பின் எல்லாமே பதிவு செய்யப்பட்ட தகவல்கள்... பின்னொருநாள் தமிழகம் உலகத்தரத்தில் செல்லும் பொழுது இதனை இன்னும் தரமாக உபயோகிக்கலாம்... மேலும் ரஜினி பிராண்ட் மீது வைக்கப்பட்ட மிகபெரிய பாரம் மற்றும் நம்பிக்கை...

    என்னைகேட்டால் சிறந்த முயற்சி என்பேன்... ஹாலிவுட் உடன் ஒப்பிட்டால் லோ பட்ஜெட் தான்... இருந்தும் எதற்குமே ஆரம்பம் வேண்டுமே

    ReplyDelete
  12. 112 நாள் ஓடிக்கொண்டிருக்கும் லயனம் படம் விமர்சனம் எழுதாத செங்கோவியை கண்டிக்கிறேன்

    ReplyDelete
  13. அனிமேசன் ரொம்ப சுமாரா இருக்குன்னு கேள்விப்பட்டேனே.....?

    ReplyDelete
  14. /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    112 நாள் ஓடிக்கொண்டிருக்கும் லயனம் படம் விமர்சனம் எழுதாத செங்கோவியை கண்டிக்கிறேன்/////

    112 நாளும் டெய்லி போய் பாத்துட்டு இருக்கும் ரமேஷ் அவர்களை பாராட்டுகிறேன்..... படம் எப்படின்னு அவருக்கு வெளக்கமா எடுத்து சொன்னேன்னா அத வெச்சாவது விமர்சனம் போட்டுடுவார்ல....?

    ReplyDelete
  15. பட்ஜெட் கம்மியா இருக்கு அதுனால பரவால்லன்னு சொல்றதெல்லாம் ஒத்துக்க முடியாது...... பங்களா கட்டனும்னு ஆரம்பிச்சிட்டு, காசு பத்தல குடிசைதான் கட்டி இருக்கோம் இதையே பங்களா மாதிரி நெனச்சிக்கோங்கன்னு சொன்னா எவனாவது ஒத்துப்பானா? அதான் காசு இல்லேன்னு தெரியுதுலே அப்புறம் ஏன்யா பங்களா கட்டப் போறேன்னு ஊரை ஏமாத்துனீங்கன்னு காரி துப்ப மாட்டானுங்க.... ?திறமையான ஆளுகளை புடிச்சு, தேவையான காச கொடுத்தா உலகத்தரம், சர்வதேச தரம் எல்லாம் தானா வந்துட போகுது..... இதுல இவனுக சாதனை என்ன வேண்டி கிடக்கு.....?

    ReplyDelete
  16. என்ன இருந்தாலும், இது சூப்பர் ஸ்டார் படம் இல்லை!///ஆமாமா........அவரு பொண்ணு எடுத்த/டைரெக்ட்(இயக்கின) பண்ண படம்..ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  17. என்ன இருந்தாலும், இது சூப்பர் ஸ்டார் படம் இல்லை!///ஆமாமா........அவரு பொண்ணு எடுத்த/டைரெக்ட்(இயக்கின) பண்ண படம்..ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  18. நமக்கு எல்லாமே பொம்மை தான்.////ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  19. // கோவை ஆவி said...
    //சோ, இன்னொரு பாகமும் வரலாம்!//அடங்கொன்னியா!! இனி அதுக்கு வேற வெயிட் பண்ணனுமா.. ஆழ விடுங்கடா சாமி!//

    எடுக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். :)

    ReplyDelete
  20. //தனிமரம் said...
    அப்படியா இங்கு நெட்டில் வந்தால் பார்ப்போம் தியேட்ட்ரில் இப்ப ரயிலில் போக நேரமாற்றம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    தெளிவா இருக்காங்க!

    ReplyDelete
  21. // bandhu said...
    இந்த கதையை எதனால் மோஷன் கேப்ச்சரில் எடுத்தார்கள்? சாதாரணமாகவே எடுத்திருக்கலாமே! கதைக்கு தேவைப் பட்டால் டெக்னாலஜி உபயோகிக்கலாமே தவிர இந்த கடைக்கு எதற்கு//

    சீனு பதில் பாருங்கள். கூடவே....... இது ராணா படத்தின் கதை தான் என்று நினைக்கிறேன். அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனதால், தயாரிப்பாளருக்கு படம் முடித்துத் தர வேண்டிய கட்டாயத்தில் இதில் இறங்கியிருக்கலாம்.

    ReplyDelete
  22. //சீனு said...
    என்னைகேட்டால் சிறந்த முயற்சி என்பேன்... ஹாலிவுட் உடன் ஒப்பிட்டால் லோ பட்ஜெட் தான்... இருந்தும் எதற்குமே ஆரம்பம் வேண்டுமே//

    உண்மை சீனு..சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  23. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    112 நாள் ஓடிக்கொண்டிருக்கும் லயனம் படம் விமர்சனம் எழுதாத செங்கோவியை கண்டிக்கிறேன்//

    அது சில்க் நடிச்ச பழைய படம் ஆச்சே..ரீ-ரிலீஸ் பண்ணியிருக்காங்களா?

    ReplyDelete
  24. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அனிமேசன் ரொம்ப சுமாரா இருக்குன்னு கேள்விப்பட்டேனே.....?//

    ட்ரெய்லரில் ரொம்ப மோசமா தெரிஞ்சது. ஆனால் தியேட்டரில் ஓகே தான். நமக்கு இதுபத்தி டெக்னிகல் நாலேஜ் இல்லாததால, கரெக்ட்டா சொல்ல முடியலை.

    ReplyDelete
  25. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    பட்ஜெட் கம்மியா இருக்கு அதுனால பரவால்லன்னு சொல்றதெல்லாம் ஒத்துக்க முடியாது...... //

    ரஜினிங்கிற மாஸ் இல்லேன்னா, இந்த பட்ஜெட்கூட வந்திருக்காது. எல்லா டெக்னிகல் விஷயங்களும் தமிழ் சினிமாவில் சாதரணமாத்தான் ஆரம்பிச்சிருக்கு, கேலி கிண்டலுடன்.

    முதன்முதலா டிடிஎச் வந்த கறுப்பு ரோஜாக்கள் படமும் சரி, avid எடிட்டிங் மகாநதில வந்தப்பவும் சரி, இதே கிண்டல் டெக்னிகல் பீப்பிள் மத்தில இருந்தது. அந்த படங்களும் கமர்சியலா தோல்வி அடைஞ்சது. இன்னிக்கு அந்த இரண்டு டெக்னாலஜியும் இல்லாத படங்கள் குறைவு. அதனால, ஆரம்பிக்கிறது நல்லது. இதை அடுத்து நல்ல டெக்னிகல் டீம் தொடரலாம்.

    ReplyDelete
  26. @பன்னிக்குட்டி ராம்சாமி

    Well said.. இதையேதான் நான் மூணு மாசமா சொல்லிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  27. //////முதன்முதலா டிடிஎச் வந்த கறுப்பு ரோஜாக்கள் படமும் சரி, avid எடிட்டிங் மகாநதில வந்தப்பவும் சரி, இதே கிண்டல் டெக்னிகல் பீப்பிள் மத்தில இருந்தது. அந்த படங்களும் கமர்சியலா தோல்வி அடைஞ்சது. /////

    புது தொழில்நுட்பத்த பயன்படுத்தனும்னு செய்ய தெரியாம ஆர்வக்கோளாறுல செய்றது வேற..... பட் பட்ஜெட் போதாதுன்னு தெரிஞ்சும் அகலக்கால் வெச்சு ஆப்பு வாங்குறது வேற......

    @Abarajithan Gnaneswaran, நன்றிங்கோ!

    ReplyDelete
  28. //Subramaniam Yogarasa said... [Reply]
    நமக்கு எல்லாமே பொம்மை தான்.////ஹி!ஹி!!ஹீ!!!//

    உண்மையைச் சொன்னேன்..ஹிஹி!

    ReplyDelete
  29. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  30. @Jayadev Das இது இரண்டாவது..இன்னொருத்தனும் போட்டிருக்கான்..அவங்க திருந்த மாட்டாங்க தலைவரே..நாமளே விளம்பரம் தர வேண்டாம்.

    ReplyDelete
  31. @செங்கோவி

    //முதன்முதலா டிடிஎச் வந்த கறுப்பு ரோஜாக்கள் படமும் சரி, avid எடிட்டிங் மகாநதில வந்தப்பவும் சரி, இதே கிண்டல் டெக்னிகல் பீப்பிள் மத்தில இருந்தது.//

    சார், கலர், நல்ல சவுண்ட் சிஸ்டம், எடிட்டிங் இதெல்லாம் எந்த ஒரு படத்தையும் ஒண்ணு படத்தை realistic ஆக்கறதுக்கோ அல்லது வேலையை இலகுவாக்கறதுக்கோ கண்டிப்பா தேவைப்படற விஷயங்கள். இந்த முன்னேற்றங்களை வரவேற்கலாம்.

    ஆனா, Motion capture ஒரு சுத்த வளைச்ச வழி. அதை தேவைப்படற இடத்துலதான் பயன்படுத்தணும். உதாரணம் Motion capture இல்லாம அவதார் எடுக்கவே முடியாது, Tintin-ல ஒரு கார்டூன் லுக் தேவைப்பட்டது... etc.

    அதை விட்டுட்டு சும்மா வீம்புக்கு Motion Capture னு இறங்கி, ஐயோ காசில்லை.. வெறும் கார்டூன் தான் எடுத்திருக்கோம். அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கன்னு சொல்ல முடியுமா?

    கதை எழுதும்போதே, "ரஜனி நடிக்கறாரு.. அப்போ பத்து பன்ச், நாலு பைட்டு ஐஞ்சு பாட்டு கன்பார்ம். படத்தை உலகம் எல்லாம் ரிலீஸ் பண்ண புகழ்பெற்ற ஹீரோயின் வேணும். அப்புறம் மோஷன் கப்ஷரையும் சேர்த்துக்கிட்டா 'புது முயற்சி, ஆதரிங்க'ன்னு சீன காட்டலாம்." னு ஆரம்பிச்சா சரியா?

    ReplyDelete
  32. @Abarajithan Gnaneswaran மோசன் கேப்சரிங்கிற்கு இவர்கள் போனதற்குக் காரணம், ரஜினியால் ராணாவில் நடிக்க முடியாமல் போனது தான். அவர்கள் கதைக்காகப் போகவில்லை என்பதையும் எல்லாரும் அறிந்தது தான்.

    என்னுடைய பாயிண்ட், இதை யாராவது துணிந்து ஆரம்பிக்கத்தான் வேண்டும். கமல், ரஜினி போன்ற பிரபலங்கள் செய்யும்போது இது அதிக அளவில் ரீச் ஆகும். அதற்கு ஒரு அறிமுகமும் மார்க்கெட்டும் உருவாகும். நல்ல டெக்னிசியன்களுக்கு அந்த மார்க்கெட்டை பிற்காலத்தில் உதவும்.

    இன்னும் தமிழில் அனிமேசன் படத்திற்கென்று மார்க்கெட்டே இல்லை என்பதையும் நினைவில் வையுங்கள். எல்லா நடிகர்களையும் வைத்து மோசன் கேப்சரிங் செய்து ஸ்டோர் செய்துகொண்டால், ‘பிற்காலத்தில்’ அவர்களை இந்த வடிவிலாவது பார்க்கலாம். மேலும், சில நினைத்துப்பார்க்க முடியாத பிரம்மாண்ட கதைகளை உருவாக்க இது உதவும்.

    நீங்கள் கோச்சடையானை மட்டும் மனதில் வைத்துப் பேசுகிறீர்கள். நான் இந்த முயற்சி வருங்காலத்தில் மற்றவர்களுக்கும் உதவும் என்ற எண்ணத்தில் பேசுகிறேன். மேலும் கதை-திரைக்கதை-வசனம் மூன்றும் நன்றாக இருந்ததையும் நினைவில் வைக்கவும்.

    ReplyDelete
  33. நானும் பாத்துட்டேன்.இந்த அதீத முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்.///எ(உ)ங்களைப் போன்ற குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!!!///சில இடங்களில் வசனக் குறைபாடு இருக்கிறது.திருவிளையாடல் நாகேஷை மீளப் பார்த்தது மகிழ்வு!

    ReplyDelete
  34. @Subramaniam Yogarasa ஆமாம் ஐயா. நம்மைப் போன்ற குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். நாகேஷ் வசனம் பேசும் ஸ்டைல்கூட அப்படியே இருந்தது. நல்ல டப்பிங்.

    ReplyDelete
  35. @செங்கோவி

    நீங்க சொல்றது சரிதான். இந்த டெக்னாலஜியை யாராவது தமிழுக்கு கொண்டுவரணும். ஆனா, அதை சரியான இடத்துல, சரியான தேவைக்காக கொண்டுவரணும். அப்போதான் அது சரியா ரீச் ஆகும். பட்ஜெட் இல்லாமல் தக்கி முக்கி இப்படி ஒண்ணை கொண்டுவந்தா, அடுத்ததா படம் எடுக்கறவனும், படம் பார்க்கறவனும் 'மோஷன் கேப்ஷர்' பேரைக் கேட்டாலே அலற மாட்டாங்க? படம் எடுக்கறவனுக்கு பணப்பிரச்சனை, பார்க்கரவனுக்கு உயிர்ப்பிரச்சினை...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.