Friday, October 4, 2013

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா : திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
வழக்கமான ஹீரோயிச சினிமாக்களுக்கு மத்தியில், மாற்று முயற்சிகள் ஜெயிக்காது என்றிருந்த சூழ்நிலையில் பீட்சா, ந.கொ.ப.காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் வந்து மக்களைக் கவர்ந்து ஜெயித்தன. அந்த வரிசையில் வரும் படம் என்பதால், நிறையவே எதிர்பார்ப்பு. ஆனால்....
 
ஒரு ஊர்ல.....................:
அட்டக்கத்தி நந்திதாவை லவ்வும் சுமார் மூஞ்சி குமார் விஜய் சேதுபதி, ஸ்வாதி-அஸ்வின் காதல் ஜோடி, ஒரு பிரக்னண்ட் லேடி - கணவர், ஒரு அல்லது இரு (!) கள்ளக்காதல் ஜோடி--------------இவர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் சில சம்பவங்களே கதை.
 
 உரிச்சா....:
வழக்கமான மசாலாப் படங்களில் ஒரு வசதி உண்டு. அவை பார்வையாளர்களைக் குழப்புவதில்லை. ஒரே நேர்கோட்டில், பல நேரங்களில் நாம் அறிந்த பாதையிலேயே பயணம் போகும். பார்வையாளனை படத்துடன் ஒன்ற வைக்கும் வேலையில் கால்வாசியை அந்த நேர்கோட்டுப் பாணியே செய்துவிடும். 
 
திரைக்கதையை புதிய பாணியில் சொல்ல விழையும்போது, பார்வையாளனோ கதையோ தொலைந்து போகும் வாய்ப்புகள் அதிகம். அதில் ஜெயித்ததாலேயே ‘அந்த நாள் - ஆரண்ய காண்டம் - சூது கவ்வும்’ இயக்குநர்கள் கொண்டாடப்படுகிறார்கள். 
 
எத்தகைய பாணிக் கதை சொல்லலாக இருந்தாலும், ஆரம்பித்த அரைமணி நேரத்திற்குள்ளாவது ‘இன்னா மேட்டர்..எங்க போறாங்கோ’ன்னு பார்வையாளனுக்கு தெளிவாக்கி விடுவது அவசியம். படத்தில் மிஸ் ஆவதே அது தான்!
 
இண்டர்வெல் வரை படத்தின் கதை இது தான் என்றோ, படத்தின் போக்கு இதுதான் என்றோ தீர்மானிக்க முடியவில்லை. எல்லாக் கதைகளுமே பிட்டுப் பிட்டாக ஓடுகின்றன. (அந்த பிட்டும் இல்லையென்பது இன்னொரு சோகம்!).

ஒரு இயக்குநராக, ’காட்சி எழுத்தாளராக (சீன் ரைட்டர்) கோகுல், விஜய் சேதுபதி போர்சனில் மட்டும் ஜெயிக்கிறார். அஸ்வின் கதைப் பகுதி ரொம்ப ஸ்லோ. போலீஸ் ஸ்டேசன் காட்சிகளில் தெரியும் யதார்த்தத்தையும் பாராட்டலாம். ஆனாலும் சாப்பாட்டில் சில பதார்த்தங்களை மட்டும் வைத்து என்ன செய்வது? 
 
ராஜாராணி இயக்குநர் போன்றே இவரும் ஒரு நல்ல சீன் ரைட்டர். ஆனால் பூமாலையை எதிர்பார்த்துச் சென்றால் உதிரிகளாக பூக்களைக் கொடுக்கிறார்கள். காமெடி இருந்தால் போதும், முழுமை வேண்டாம் என்பதற்கு உதாரணமாக ராஜாராணியை அடுத்து இந்தப் படம்!
 
விஜய் சேதுபதி :
நடிகன்டா நீ! - என்று எல்லாருமெ பாராட்டும் அளவிற்கு பின்னி எடுக்கிறார். பீட்சாவுக்கும் சூது கவ்வும்க்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம். டைரக்டர்களின் நடிகன் என்று தைரியமாகச் சொல்லலாம். 
அவரது உடல்மொழியும், டயலாக் டெலிவரியும் அப்படியே லோ-கிளாஸ் பையனை முன்னிறுத்துகின்றன. ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை கைதட்டல்களை அள்ளுகிறார்.

நந்திதா - அஸ்வின் - ஸ்வாதி :
நந்திதா வழக்கம்போல் நல்ல நடிப்பு. புதுமுகம் அஸ்வின், செல்வராகவன் பட இரண்டாவது ஹீரோ மாதிரியே இருக்கிறார், நடிக்கிறார். ஸ்வாதிக்கு வயதானது நன்றாகவே தெரிகிறது. மாடர்ன் ட்ரெஸ் வேறு. என்னத்தச் சொல்ல!
 
அஸ்வினின் ஆபீஸ் காட்சிகளில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். படத்தைக் கெடுப்பது இவர்கள் வரும் காட்சிகள் தான்.
 
காமெடியன்ஸ் :
பசுபதி காமெடியில் கலக்குகிறார். கூடவே ரோபோ சங்கர் வேறு. அவர்கள் வரும் காட்சியில் எல்லாம் சிரிப்பு தான். இந்தப் படத்தின் (+ ராஜா ராணியின்) இன்னொரு ஆச்சரியம் நான் கடவுள் வில்லன் ராஜேந்திரனின் காமெடி தான். சில குளோஸ் அப் காட்சிகளில் பயமுறுத்தினாலும், பல நேரங்களில் சிரிக்க வைக்கிறார். அதுவும் அந்த சிம்பு பாடல், அட்டகாசம்!
 
சூரி...ம்..வடிவேலுக்கு ஃப்ரெண்ட்ஸ்/வின்னருக்குப் பிறகே ஒரு ஸ்டைல் செட் ஆனது. அதுவரை ஃபிட்னெஸ் இல்லாத உடல்மொழியுடன் சலம்பல் மட்டுமே இருந்தது. சூரிக்கும் அப்படி ஒரு பிரேக்/இயக்குநர் தேவைப்படுகிறார். அவருக்கென்று ஒரு நகைச்சுவைப்பாணி உருவாகாதவரை, நமக்கு கஷ்டம் தான். 
 
மலையாள பாஸாக வரும் பாஸ்கர், வழக்கம்போல் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுக்கிறார்.
 
நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- பாதிப் படம்வரை இலக்கை தெளிவாக்காமல் ஓடும் திரைக்கதை

- மிக மெதுவாகச் செல்லும் அஸ்வின், ஸ்வாதி காதல்(?) போர்சன்
 
- ஒரு கொலை நடக்கிறது. அது சிலரின் வாழ்வை எப்படிப் பாதிக்கிறது என்பது இந்தப் படத்தின் திரைக்கதை செல்லும் பாதை. ஆனால் அந்தக் கொலை, முக்கியத்துவத்துடன் காட்டப்படவில்லை. ஏதோ ஒரு சைடு சீன். இனிமேல் இதைவிடப் பெரிதாக ஏதோ நடக்கப்போகிறது என்று தோன்ற வைத்துவிட்டது. ஆனால் படத்தின் உச்ச வன்முறையே அந்தக் கொலை தான். அதை படத்தின் ஆரம்பத்திலேயே, காரணத்தோடு தெளிவாக நம் மனதில் பதிய வைத்திருக்க வேண்டும். அட்லீஸ்ட், ஒரு பிரபல நடிகரையாவது கொலை செய்யப்படுபவராக நடிக்க வைத்திருக்கலாம். கதையின் மெயின் பாயிண்ட்டில் கோட்டை விட்டு விட்டார்கள். 

- இரண்டு ஹீரோயினுமே குடும்ப குத்துவிளக்காகப் போய்விட்டது!
 
 பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- விஜய் சேதுபதி....விஜய் சேதுபதி....விஜய் சேதுபதி....விஜய் சேதுபதி....!

- நம் மனம் கவர்ந்த மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு

- வித்தியாசமான பாடல்கள். நாயே, ப்ரே பண்றேன், என் வீட்ல...சூப்பர் ஹிட் பாடல்கள்.

- என்னதான் படம் முழுக்க எல்லாருமே குடித்துக்கொண்டே இருந்தாலும், படத்தின் கருத்தாக குடியின் தீமையை கிளைமாக்ஸில் அழுத்தமாக உணர வைத்திருப்பது.

- கோகுல் + மதன் கார்க்கி வசனம். பல காட்சிகளில் புன்முறுவல் பூக்க வைக்கிறது.


- இன்றைய நிலையில், படம் எப்படி இருந்தாலும் காமெடி மட்டுமே போதும் எனும் மனோபாவம் நம் மக்களுக்கு வந்திருக்கிறது. எனவே குருட்டு லக்கில் ராஜாராணி போலவே இதுவும் ஓடித் தொலைக்கலாம்!

பார்க்கலாமா? :



விஜய் சேதுபதிக்காக வேண்டுமானால் பார்க்கலாம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

23 comments:

  1. தனித்தனியா பிரிச்சு அலசிட்டீங்க அண்ணே...

    ReplyDelete
  2. விஜய சேதுபதிக்காக பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  3. இந்த படாத்ஜின் விமர்சனங்களே பார்த்துக்கலாம் என்ட்ர மனநிலை ஏற்படுத்தி விட்டது

    ReplyDelete
  4. //ஸ்வாதிக்கு வயதானது நன்றாகவே தெரிகிறது //

    நிஜமாவாண்ணே? சோ சேட்!

    ReplyDelete
  5. படம் பார்க்கணும்! தமிழில் இந்தமாதிரிப் படங்கள்தான் என் முதல் சாய்ஸ்!

    ReplyDelete
  6. // இரண்டு ஹீரோயினுமே குடும்ப குத்துவிளக்காகப் போய்விட்டது!//சரியான ஜொள்ளு பார்ட்டிதான்.

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம்!அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து 'மேய்ந்திருக்கிறீர்கள்'!!!

    ReplyDelete
  8. அலசி ஆராய்ந்த பகிர்வு....
    நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  9. /ஸ்கூல் பையன் said...

    தனித்தனியா பிரிச்சு அலசிட்டீங்க அண்ணே...//

    வெட்டியா இருக்கேனே தம்பீ!

    ReplyDelete
  10. //Blogger திண்டுக்கல் தனபாலன் said...

    விஜய சேதுபதிக்காக பார்க்க வேண்டும்...//

    கரெக்ட்..கண்டிப்பா அவருக்காக பாருங்க.

    ReplyDelete
  11. // சக்கர கட்டி said...

    இந்த படாத்ஜின் விமர்சனங்களே பார்த்துக்கலாம் என்ட்ர மனநிலை ஏற்படுத்தி விட்டது//

    ரைட்டு.

    ReplyDelete
  12. // ஜீ... said...

    படம் பார்க்கணும்! தமிழில் இந்தமாதிரிப் படங்கள்தான் என் முதல் சாய்ஸ்! // அதனால தான் ரொம்ப ஆதரிக்கிறோம்.

    ReplyDelete
  13. // Manickam sattanathan said...

    // இரண்டு ஹீரோயினுமே குடும்ப குத்துவிளக்காகப் போய்விட்டது!//சரியான ஜொள்ளு பார்ட்டிதான்.//

    இதெல்லாம் நமக்குள்ள இருக்கட்டும்ணே...!

    ReplyDelete
  14. // Subramaniam Yogarasa said...

    நல்ல விமர்சனம்!அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து 'மேய்ந்திருக்கிறீர்கள்'!!!//

    என்னை மேயுறேன்னு சொல்றதுல அவ்ளோ சந்தோஷமா?

    ReplyDelete
  15. அஸ்வினின் ஆபீஸ் காட்சிகளில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். படத்தைக் கெடுப்பது இவர்கள் வரும் காட்சிகள் தான். //

    Yes boss

    - இரண்டு ஹீரோயினுமே குடும்ப குத்துவிளக்காகப் போய்விட்டது!//

    So sad

    ReplyDelete
  16. அஸ்வினின் ஆபீஸ் காட்சிகளில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். படத்தைக் கெடுப்பது இவர்கள் வரும் காட்சிகள் தான். //

    Yes boss

    - இரண்டு ஹீரோயினுமே குடும்ப குத்துவிளக்காகப் போய்விட்டது!//

    So sad

    ReplyDelete
  17. குறை நிறைகளைச் சரியாக எடுத்துச் சொல்லும் விமரிசனம்

    ReplyDelete
  18. நேரம் கிடைத்தால் பார்ப்போம்!

    ReplyDelete
  19. எனக்கு என்னமோ ஓரம்போ, வ குவாட்டர் கட்டிங், வானம் மூணு படத்தையும் மிசியில அரச்சி குடுத்தமாதிரி இருந்தது. பட் அந்த படங்கள விடவும் சில இடங்கள் ரொம்பவே தொய்வாகவும் பொறுமையை சோதிப்பதாகவும் இருந்தது. விஜய் சேதுபதி பசுபதி போர்சன் தவிர்த்து எதுவும் மனதில் ஒட்டாதது போன்ற ஒரு பீலிங். "புது முயற்சிகள்", "மாற்று சினிமா" அப்பிடின்னெல்லாம் பெயர் சொல்லி இந்த மாதிரியான படங்களை கண்மூடித்த் தனமாக ஆதரிப்பது ஆரோக்கியமானதுதான என்று ஒருமுறை நம் விமர்சக சிங்கங்கள் மீழ் பரிசீலனை செய்யவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  20. // KANA VARO said...
    இரண்டு ஹீரோயினுமே குடும்ப குத்துவிளக்காகப் போய்விட்டது!........So sad.//

    ம்..அழக்கூடாது..அழக்கூடாது..!

    ReplyDelete
  21. // சென்னை பித்தன் said...
    குறை நிறைகளைச் சரியாக எடுத்துச் சொல்லும் விமரிசனம்//

    வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  22. // தனிமரம் said...
    நேரம் கிடைத்தால் பார்ப்போம்!//

    கரெக்ட்டான முடிவு!

    ReplyDelete

  23. Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
    //எனக்கு என்னமோ ஓரம்போ, வ குவாட்டர் கட்டிங், வானம் மூணு படத்தையும் மிசியில அரச்சி குடுத்தமாதிரி இருந்தது.//

    அந்த 3 படங்களையும் பார்க்காத எனக்கே 'கேரா' இருந்துச்சே! அப்போ உங்க நிலைமை?

    // "புது முயற்சிகள்", "மாற்று சினிமா" அப்பிடின்னெல்லாம் பெயர் சொல்லி இந்த மாதிரியான படங்களை கண்மூடித்த் தனமாக ஆதரிப்பது ஆரோக்கியமானதுதான என்று ஒருமுறை நம் விமர்சக சிங்கங்கள் மீழ் பரிசீலனை செய்யவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.//

    சரியாச் சொன்னீங்க புட்டிப்பால்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.