Thursday, February 3, 2011

INCEPTION - சுட்ட படமா? கஜினி சுட்ட படமா?

டிஸ்கி: கொஞ்ச நாளாவே ரொம்ப சீரியஸா எழுதுற மாதிரி தோணுச்சு.(நாங்க சீரியஸா எடுத்துக்கலயே!)..அதான் இந்தக் காமெடிப் பதிவு...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி..இன்ஸெப்சன்.. இன்ஸெப்சன்..என்று பதிவுலகமே அல்லோகப்பட்டது..கிறிஸ்டோபர் நோலன் மாதிரி வருமாஎன எல்லோரும் புளகாங்கிதம் அடைந்தனர். என்னைப் பார்க்கும் நண்பர்களும் இன்னும் பார்க்கலையாஎன்று கேட்டு விட்டு, ஏதோ வேற்றுகிரகவாசியைப் பார்ப்பதுபோல் பார்த்தனர்..இனியும் பொறுத்தால் பதிவு விலக்கம்செய்யப் படுவோமோ எனப் பயந்துபோய், டிவிடி-யை தேடி வாங்கி இன்செப்சனைப் பார்த்தேன். புதிய கான்செப்ட் என்று சொன்னார்களேன்னு பார்த்தால், இது அப்பட்டமான காப்பி என்பது புரிந்து அப்படியே ஷாக்ஆயிட்டேன்..எப்படியேன்னு சொல்றேன்..கேளுங்க..
 புரட்சித்தலைவர் நடித்த எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் சரோஜா தேவியுடன் தலைவர் ஒரு ஷூட்டிங்கை வேடிக்கை பார்ப்பார். அப்போது தலைவர்ஒரு கனவு காண்பார்..குமரிப் பெண்ணின் உள்ளத்திலேஎன்று பாட ஆரம்பிப்பார்..அப்போது சரோஜா தேவி தலைவரின் கனவிற்குள் நுழைந்துஆ..ஆ..ஆ...குமரிப் பெண்ணின்என்று தொடர்வார்..

அதாவது ஒருத்தரோட கனவுக்குள் இன்னொருவர் நுழையறதுங்கிற கான்செப்ட்ட அப்போதே நம்ம ஆட்கள் கண்டுபிடிச்சுட்டாங்க..இது மாதிரி நிறைய படங்கள்ள ஒருத்தர் கனவில் இன்னொருத்தர் நுழைஞ்சதெல்லாம் இப்போ ஞாபகம் வருதா... 

ஓ.கே..இப்போ Projections..அது எங்கேன்னு நீங்க கேட்கலாம்..ஹீரொ-ஹீரொயின் பின்னாடி லா..லா..ன்னு ஓடி வரும் ஆரவாரப் பேய்களெல்லாம் யாரு?..அதாங்க  Projections..

சரி..ஒருத்தர் கனவுக்குள்ளே இன்னொருத்தரும் Projections-ம் வந்தாச்சு ஓ.கே..ஆனா Inception-ஐ அதாவது விதைக்கறது எங்கேன்னு நீங்க கேட்கலாம்..விஜயோட வேட்டைக்காரன்பார்த்திருப்பீங்க (அட, கூச்சப்படாம ஒத்துக்கோங்ணா!)..அதுல ட்ரெய்ன்ல அனுஷ்காவைப் பார்த்ததும் கல்யாணம் ஆகுறமாதிரியும் குழந்தைங்க பிறக்கிறமாதிரியும் விஜய் கனவு காண்பார்..ஒரு கனவுல குழந்தையையேவிதைக்க முடிஞ்ச நம்ம ஆட்களால ஒரு கனவுல ஐடியாவை விதைக்க முடியாதா?
ஆத்தீ..கண்டுபிடிச்சுட்டாருய்யா!
Inception படம் பார்த்தப்போ தான் ஒரு பயங்கரமான சினிமா ரகசியம் ஒண்ணை கண்டுபுடிச்சேன்..இத்தனை நாளா நோலனோட ‘Memento’ படத்தை சுட்டுத்தான் நம்ம ஏ.ஆர்.முருகதாஸ் கஜினிபடம் எடுத்ததா நினைத்துக்கொண்டிருந்தோம்..அதுதான் இல்லை..1975லேயே(!) முருகதாஸ் கஜினி கான்செப்ட்டை ரெடி பண்ணீட்டாரு..இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட நோலன், முருகதாஸோட கனவுல புகுந்து அந்த கான்செப்ட்டை சுட்டுட்டாரு..இதுபுரியாம அந்த தங்கத்தை நாம எல்லாம் தப்பா நினைச்சிட்டோம்.அதுக்காக உங்க எல்லார் சார்பாவும் முருகதாஸ்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்..முருகதாஸ்க்கு மட்டும்தான் இந்த அநியாயம் நடந்திருக்கா, இல்லே ஷங்கர், மணிரத்னம், கமல் போன்ற ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்கும் எல்லோருக்கும் நடந்திருக்கான்னு நம்ம சி.பி.ஐ விசாரிக்கணும்.

இனிமே இதுபோல நடக்காம இருக்கணும்னா, நம்மூர் டைரக்டர்ஸ் எல்லாரும் தூங்கும்போது 2 பாடிகார்டை பக்கத்துல நிறுத்தி வச்சுக்கணும்..நோலன் கனவுக்குள்ளே நுழையற மாதிரி தெரிஞ்சதுன்னாஒரே மிதி..அதாவது Kick..யாருக்கா நம்ம ஆட்களுக்குத்தான்..கனவு கலைஞ்சிடும்.
என்னது..என் கனவுல வந்தது அசின் இல்லையா?
ஓ.கே...பேக் டூ இன்ஸெப்சன்..நோலனால கனவு காண்பவர் இல்லாம கனவு காண முடியலை. அதுலயும் நம்ம ஆட்கள் அவரை பீட் பண்ணீட்டாங்க..ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே’-ங்கிற படத்துல ஒரு சீன்..ஹீரோ ஷாம்-ன் அம்மா ஒரு கனவு காண்பாங்க..அந்த கனவுல சினேகா குளிச்சுக்கிட்டிருப்பாங்க..அதை ஷாம் எட்டிப் பார்ப்பாரு(!!)..உடனே பாட்டு ஆரம்பிக்கும் ஒரு காதல் வந்துச்சோன்னு..ஷாமோட அம்மா அந்த கனவுல வரவே மாட்டாங்க..முடியுமா..நோலனால முடியுமா இப்படி கனவு காண..இப்படி படம் எடுக்கத்தான் முடியுமா? இன்ஸெப்சன்ல ஒன்னுக்கு(யூரின் இல்லீங்க) ரெண்டு ஹீரோயின் இருந்தும் இப்படி சீன் வைக்கத் தோணுச்சா அந்தாளுக்கு?
ஆக, தமிழனின் கான்செப்ட்டை வச்சு படம் எடுத்து, தமிழன்கிட்டயே பாராட்டு வாங்கிறார்னா அந்த வெள்ளைக்கார தொரைக்கு எவ்வளவு தகிரியம் இருக்கனும்..இதை தமிழ்ப்பதிவர்களாகிய நாமெல்லாம் கண்டிக்க வேண்டாமா?...ஆங்கில மோகத்தில் அடிமைப்பட்டுக் கிடக்கலாமா?..ஏன் இதைக் கண்டிச்சு யாரும் எழுதவில்லை? நோலனை நோண்டி நொங்கு எடுத்திருக்க வேண்டாமா?

ரொம்ப கோவம் கோவமா வர்றதால இத்தோட நான் நிறுத்திக்கிறேன்..இனி நீங்க கண்டினியூ பண்ணுங்க!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

31 comments:

  1. இதுவரை எந்த ஹாலிவுட் படத்திலேயோ, உலகசிநிமாவிலேயோ சொல்லப்படாத ஒரு கதைன்னு ஏழாம் அறிவு பற்றி சொன்னார் நம்ம தங்கம் முருகதாஸ்!
    ஆனா பாருங்க கொடுமைய! அந்தப் பேட்டிய படிச்சுட்டு(?!) நோலன் பயபுள்ள கை(கனவு)வரிசையைக் காட்டி இன்செப்ஷன் எடுத்திட்டான்!

    ReplyDelete
  2. இது என் கனவுல நீங்க சுட்ட இடுகைப்போலத் தெரியுதே.. இதுக்கு ஒரு என்கொயரி வைங்கப்பா... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @ஜீ...: ச்சே..நோலனுக்குப் போய் ரசிகரா இருக்கோமேன்னு நினைக்கும்போது அழுகை அழுகையா வருது ஜீ!

    ReplyDelete
  4. @மதுரை சரவணன்:அய்யய்யோ...ஏன் பாஸ் என்னை நோலன் ரேஞ்சுக்கு உயர்திப்பேசுறீங்க..சுட்டதுக்கு வாழ்த்துக்களா? இது புதுசா இருக்கே?

    ReplyDelete
  5. @ஜீ...: //நோலன் பயபுள்ள கை(கனவு)வரிசையைக் காட்டி இன்செப்ஷன் எடுத்திட்டான்// பதிவோட தலைப்பைக் கரெக்டாப் பிடிச்சுட்டீங்களே..நான் யாராவது கேட்பாங்கன்னு எதிர்பார்த்தேன்..உங்களுக்கு உண்மையிலேயே ‘ஏழாம் அறிவு’ இருக்கும்போல!

    ReplyDelete
  6. >>> இந்த சப்பான் டைரடக்கர் கூட நம்ம மிஸ்கின் படம் நந்தலாலாவை சுட்டுட்டாராமே..படா பேஜாரா கீது இந்த பசங்களோட. இன்னா பொயப்பு இது.

    ReplyDelete
  7. ஓ.கே...பேக் டூ இன்ஸெப்சன்..நோலனால கனவு காண்பவர் இல்லாம கனவு காண முடியலை. அதுலயும் நம்ம ஆட்கள் அவரை பீட் பண்ணீட்டாங்க..’ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே’-ங்கிற படத்துல ஒரு சீன்..ஹீரோ ஷாம்-ன் அம்மா ஒரு கனவு காண்பாங்க..அந்த கனவுல சினேகா குளிச்சுக்கிட்டிருப்பாங்க..அதை ஷாம் எட்டிப் பார்ப்பாரு(!!)..உடனே பாட்டு ஆரம்பிக்கும் ‘ஒரு காதல் வந்துச்சோ’ன்னு..ஷாமோட அம்மா அந்த கனவுல வரவே மாட்டாங்க..முடியுமா..நோலனால… முடியுமா இப்படி கனவு காண..இப்படி படம் எடுக்கத்தான் முடியுமா? இன்ஸெப்சன்ல ஒன்னுக்கு(யூரின் இல்லீங்க) ரெண்டு ஹீரோயின் இருந்தும் இப்படி சீன் வைக்கத் தோணுச்சா அந்தாளுக்கு?


    .......சாட்டையடி கேள்வி....... இதுக்கு பதில் சொல்லிட்டு நோலன் சார், அடுத்த படம் எடுக்கணும். அது வரைக்கும் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க சொல்லிடுவோம்...அவர் கனவுல போய் சொன்னா போதாது? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

    ReplyDelete
  8. //ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே’-ங்கிற படத்துல ஒரு சீன்..ஹீரோ ஷாம்-ன் அம்மா ஒரு கனவு காண்பாங்க..அந்த கனவுல சினேகா குளிச்சுக்கிட்டிருப்பாங்க..அதை ஷாம் எட்டிப் பார்ப்பாரு(!!)உடனே பாட்டு ஆரம்பிக்கும் ‘ஒரு காதல் வந்துச்சோ’ன்னு..ஷாமோட அம்மா அந்த கனவுல வரவே மாட்டாங்க..//

    இவ்வளவு கே..ச்சே! கலைத்தன்மையாய் யாரால யோசிக்க முடியும்? இந்த ஒரு சீனுக்கே Oscar, BAFTA எல்லாம் கொடுத்திருக்க வேணாமா? என்ன கொடுமை பாஸ்!

    ReplyDelete
  9. //முருகதாஸ்க்கு மட்டும்தான் இந்த அநியாயம் நடந்திருக்கா, இல்லே ஷங்கர், மணிரத்னம், கமல் போன்ற ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்கும் எல்லோருக்கும் நடந்திருக்கான்னு நம்ம சி.பி.ஐ விசாரிக்கணும்.//

    ஹ ஹ..செம லொள்ளு செங்கோவி...

    ReplyDelete
  10. ஆணியே புடுங்கவேணா
    ஓட்டு போட்டாச்சு
    முடியல

    ReplyDelete
  11. @! சிவகுமார் !:அதனாலதான் பாடிகார்ட் போடுவொம்கிறேன்!

    ReplyDelete
  12. @Chitra:நீங்க தான் நோலனுக்குப் பக்கத்துல இருக்கீங்க..நீங்களே சொல்லிடுங்கக்கா!

    ReplyDelete
  13. @ஜீ...:ஆஸ்கார் கொடுக்காம அவங்களை அவங்களே அசிங்கப்படுத்திக்கிட்டாங்க ஜீ..சின்னப் பசங்க!

    ReplyDelete
  14. @ஆனந்தி..;லொள்ளாஆ..நான் எப்பளவு சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன்...

    ReplyDelete
  15. @Speed Master:என்ன மாஸ்டர் முடியலைன்னு சொல்லீட்டீங்க..ட்வீட்டர்ல பொங்க வேண்டாமா!

    ReplyDelete
  16. Asaththal....sirichu enjoy panninen....

    ReplyDelete
  17. @Raja:நன்றி ராஜா...4 பேர் சந்தோசமா சிரிப்பாங்கன்னா எது பண்ணாலும் தப்பில்லை.

    ReplyDelete
  18. Nolan maathiri differentaa yosichirukkeenga.vazhthukkal.

    ReplyDelete
  19. @பாரத்... பாரதி...: பரிட்சை நேரம் வரமாட்டீங்கன்னு நினைச்சேன்...போயி புள்ள குட்டிகளைப் படிக்கவைங்க பாஸூ...

    ReplyDelete
  20. @ஐத்ருஸ்://Nolan maathiri differentaa yosichirukkeenga.// ஏன் இப்படி..பாவம்யா அவரு!

    ReplyDelete
  21. @angusamy: வேணாமா..நோலனை நிறுத்தச் சொல்லுங்க..நான் நிறுத்தறேன்.

    ReplyDelete
  22. எப்படிங்க இது!! மாத்தி யோசிக்றதுக்கும் ஒரு அளவு இல்லையா ?

    ReplyDelete
  23. பாப்பானே,
    உனக்கு ரொம்ப மூளை இருக்கு,இரு ஆணியடிச்சி சிரட்டைய பிளந்து கொஞ்சம் வெளிய எடுக்கறேன்.

    ReplyDelete
  24. @Madurai pandi: இதுக்கெல்லாமா அளவு வச்சுக்க முடியும்..கருத்துக்கு நன்றி பாண்டி.

    ReplyDelete
  25. @kummiyadi: என்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரியவில்லை நண்பரே..நோலன் ரசிகரா நீங்கள்..

    ReplyDelete
  26. //முருகதாஸ்க்கு மட்டும்தான் இந்த அநியாயம் நடந்திருக்கா, இல்லே ஷங்கர், மணிரத்னம், கமல் போன்ற ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்கும் எல்லோருக்கும் நடந்திருக்கான்னு நம்ம சி.பி.ஐ விசாரிக்கணும்.//அடப்பாவி வெள்ளைக்கார பயலுவளா, இத்தனை தமிழ்க்காரனுங்களை ஏமாத்தி படம் பண்ணியிருக்கீங்களா, எங்காளுங்க மாதிரி உங்களுக்கு ஒரிஜினாளிட்டியே வராதாடா, முதலில் மணிரத்னம் ஷங்கர் கிட்ட இருந்து கத்துகுங்கடா, எப்படி உங்ககிட்ட இருந்து லாவகமா கதையை சுட்டு படம் பன்னி திரும்ப உங்ககிட்டேயே அவார்டுக்கும் அனுப்பி நீங்க மூஞ்சியில் காறித் துப்பியதை வெளியில தெரியாம துடைச்சிட்டு மனங்கெட்ட பொழப்பு நடத்துவதெப்படின்னு.

    ReplyDelete
  27. @Jayadev Das:நம்மாட்களுக்கு இருக்குற தில் வேற யாருக்கும் வராது..கூச்சப்பட்டா பொழப்பு நடத்த முடியுமா சார்...

    ReplyDelete
  28. தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
    நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....

    ReplyDelete
  29. @sakthistudycentre-கருன்:ஏதோ நம்மால் ஆனது....நன்றி கருன்..

    ReplyDelete
  30. போய்யா யோவ்.. சீரியஸா படிக்க வந்தா.. ஹஹஹ்ஹா.. சிரிப்பு காட்டிகிட்டு..!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.