Thursday, February 17, 2011

புருஷத் தியாகியும் கள்ளக்காதலனும் (கள்ளக்காதலர் தின ஸ்பெஷல்)

நன்றி: இந்தியா படு ஸ்பீடாக வல்லரசு ஆகிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தச் செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கு!

புண்ணிய பூமியான திருவண்ணாமலைக்குப் பக்கத்தில்தான் எப்படியோ அந்த அவதாரம் நிகழ்ந்தது. அவர் பெயர் கஸ்தூரி. அந்த தூரிக்கும்(பெண்ணின் நலன் கருதி பெயர் சுருக்கப்படுகிறது!!)அதே ஊரில் அவதரித்த லோகனாதனுக்கும் பத்திக்கிச்சு.அந்தக் கதை ஒரு பக்கம் ஓடிக்கிட்டு இருக்கும்போதே, தூரிக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. தூரி தான் நல்ல பொண்ணாச்சே..அதனால வீட்ல பார்த்த மாப்பிள்ளையையே கட்டிக்கிச்சு. அந்த பெரிய மனசுக்காரர் பேரு ஆறுமுகம். (என்னடா இது, முருகருக்கு வந்த சோதனை!)
Profile ஃபோட்டோல இருக்குற புள்ள பாக்குதுய்யா!
தூரியும் ஆறுமுகம்கூட நல்லாக் குடும்பம் நடத்தி ஒரு பிள்ளையும் பெத்துக்கிச்சு. அதுக்குப் போட்டியா,நம்ம லோகும் வேற ஒரு பொண்ணைக் கட்டி 2 பிள்ளை பெத்துக்கிட்டாரு. இதுவரைக்கும் நல்லாத் தான் போய்க்கிட்டிருந்துச்சு. திடீர்னு ரெண்டு பேருக்கும் பழைய லவ்வு பீறிக்கிட்டு வந்திடுச்சு. அவ்வளவு தான், லோகு உடனே கிளம்பி தூரி வாழ்ந்த சென்னைக்கே வந்துட்டார். டென்சன ஆன ஆறுமுகம், கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டுப் போயிட்டாரு.(பழனிக்கான்னு யாராவது கேட்டீங்கன்னா...அழுதுடுவேன்)

அப்புறம் என்ன, மாதர்குல மாணிக்கமான தூரியும் லோகும் ஒரு வருசம் ஜாலியா குடும்பம் நடத்துனாங்க. ஆனா வெளில நம்ம தியாகச் செம்மல் ஆறுமுகத்துக்குத் தான் ஒரு ஆண்டி கூட செட் ஆகலை. வெறுத்துப் போன தியாகி, திரும்ப வீட்டுக்கே வந்துட்டாரு.(முருகா..நீ ஏன் நல்லவங்களையே சோதிக்கிற..)

இப்போ பெரிய மனுசங்களை வச்சு பஞ்சாயத்தைக் கூட்டுனாரு ஆறுமுகம்.பெருசுகளும் அந்த காதல் பறவைகளுக்கு எடுத்துச் சொன்னாங்க. தூரியும் லோகும் ஒரு வழியா பிரியறதுக்கு ஒத்துக்கிட்டாங்க.

அப்போதான் லோகு ஒரு வேண்டுகோளை வச்சாரு. ‘கடைசியா, ஒரு வாரம் தூரி கூட வாழ்ந்துட்டுப் போறேன். ஆறுமுகமும் இருக்கட்டும், எல்லாரும் ஒன்னா ஒரே வீட்ல இருப்போம்’ன்னாரு (செத்தப் பொறுங்கோ..நேக்குத் தலையெல்லாம் சுத்திண்டு வர்றது.கொஞ்சம் ஜலம் குடிச்சுண்டு வந்திடறேன்!)

பத்தரை மாத்துப் பத்தினியான தூரி, ’என் புருஷன் ஆறுமுகத்துக்கு ஓ.கேன்னா, எனக்கும் ஓ.கேன்னு சொல்லிடுச்சு.’வாழ்கையிலே எவ்வளவோ தியாகம் பண்ணியாச்சு, ஒருவாரம் தானே’ன்னு ஆறுமுகமும் ஒத்துக்கிட்டாரு. ரெண்டு மூணு நாள் நல்லாத் தான் போச்சு. அம்மணி ரெண்டு பேருக்கும் சோறு வடிச்சுக் கொட்டி, தடபுடல் விருந்தோட குடும்பம் நடத்துச்சு(குடும்பமாடா அது..).
சண்டாளா..என் படத்தை ஏன்யா போட்டே?

ஒரு நாள் நைட் நம்ம(!) தூரியும் லோகும் (தனியா) போய் படுத்துட்டாங்க. நம்ம தியாகி டிவி பார்த்துக்கிட்டு இருந்தாரு. தூரிக்கு டிவி சத்தம் தொந்தரவா இருந்தது. ’நாம யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாம வாழ்ந்துகிட்டிருக்கோம், இந்த மனுசன் இப்படி டிவியைப் போட்டு நம்மளைத் தொந்தரவு பண்றானே’ன்னு, எந்திரிச்சுப் போய் ஆறுமுகத்துகிட்ட டிவியை ஆஃப் பண்ணச் சொல்லுச்சு.

என்ன அதிசயம்..ஆறுமுகம் கடுப்பாகி கத்தியால குத்த வந்துட்டாரு.  இந்த அநியாயத்தை ’அதையும் தாண்டிப் புனிதமான காதலர்’ லோகு வேடிக்கை பார்க்க முடியுமா..அவர் வந்து தடுத்தாரு. அவ்வளவுதாங்க, ஆறுமுகம் அந்தக் கத்தியாலயே சதக், சதக்னு லோகை குத்தீட்டாரு.அங்கயே லோகு அவுட்டு! இப்போ ஆறுமுகம் ஜெயில்ல!  

அட நன்னாரிப் பயலே, இப்போகூட ‘ஏன் டிவி பார்க்கவிடலை’ன்னு தான் குத்துனயா நீயி....விளங்கிரும்டே..விளங்கிரும்.

உலகம் இந்த ரேஞ்ச்ல போறது தெரியாம இன்னும் ‘ஆத்தாவும் தாத்தாவும்’னு சின்னப்புள்ளத் தனமா காதலர் தின ஸ்பெஷல் போடறமேன்னு நினைச்சு, சுவத்துலயே நங்கு நங்குன்னு முட்டிக்கிட்டேன்.அதுக்குப் பின்னூட்டமும் ஓட்டும் போட்ட அப்பாவிப் புள்ளைகல்லாம் இந்தப் பதிவைப் படிச்சிட்டு என்ன செய்யப் போகுதுகளோ தெரியல.

என்ன கொடுமை சரவணா இது!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

38 comments:

  1. என்ன கொடுமை சரவணா இது!

    ReplyDelete
  2. நல்லாத்தான் கலாச்சிகினே, இன்னாத்துக்கு நைனா நம்ம கொ.ப. செ.படத்த போட்டுகின தலீவா?
    அந்த அம்மா சாபம் சும்மா வுடாது ராசா!!

    ReplyDelete
  3. இந்த பதிவு வாசித்து விட்டு, நான் கோமாவுல போயிட்டேனாம்!!!!

    ReplyDelete
  4. எனக்கென்னமோ இந்தக்கதையில கொலயத்தவிர மத்தெல்லாம் அந்த ஊத்தப்பம் நடிகையோட ஒத்துப்போராப்பல இருக்கு ஹி ஹி

    ReplyDelete
  5. நறுக்குனு நாலு ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

    ReplyDelete
  6. //அதுக்குப் பின்னூட்டமும் ஓட்டும் போட்ட அப்பாவிப் புள்ளைகல்லாம் இந்தப் பதிவைப் படிச்சிட்டு என்ன செய்யப் போகுதுகளோ தெரியல.//

    காடல் வால்க!

    ReplyDelete
  7. @THOPPITHOPPI: வாங்க தொப்பி..கொடுமை தான்!

    ReplyDelete
  8. @Robin: என்னங்க ஒத்த வார்த்தையில முடிச்சுட்டீங்க..பேச்சே வரலையா..அசந்துட்டீங்க போல!

    ReplyDelete
  9. @கக்கு - மாணிக்கம்: உங்களுக்கு வேணா அவர் கொ.பெ.செ.வா இருக்கலாம்..எனக்கு அவர் தங்கத்தலைவி..பதிவு ட்ரையாத் தெரியும்போதெல்லாம் தலைவி தரிசனம் கொடுப்பார்!

    ReplyDelete
  10. @Chitra: அமெரிக்கா போயும் நாம அம்மாஞ்சியாத்தான் இருக்கோம்..இவங்க....

    ReplyDelete
  11. @விக்கி உலகம்:ஊத்தாப்பம் நடிகையா? அது யாருங்க..

    ReplyDelete
  12. @sakthistudycentre-கருன்: இவங்ககிட்ட நாம நிறையக் கத்துக்கணும் வாத்யாரே.

    ReplyDelete
  13. @middleclassmadhavi: கவலைப் படாதீங்கக்கா..

    ReplyDelete
  14. @MANO நாஞ்சில் மனோ: ஒரு டிவியால ஒரு நல்ல குடும்பமே நாசமாயிடுச்சு, பாத்தீங்களா..

    ReplyDelete
  15. @எஸ்.கே: வாங்க எஸ்.கே...ரொம்ப நாளாச்சு..காடல் வால்க..வால்க!

    ReplyDelete
  16. @பாரத்... பாரதி...: அய்யய்யோ..நீங்களுமா இந்தப் பதிவைப் படிக்கிறீங்க...

    ReplyDelete
  17. கீழ உள்ள அக்கா படத்த இன்னும் கொஞ்சம் பெருசா போட்டிருக்கலாம்.....

    ReplyDelete
  18. @பன்னிக்குட்டி ராம்சாமி: //18+ போடக்கூடாதா....?// அடடா, அது தெரியாமத்தான் உள்ள வந்துட்டீங்களா..

    ReplyDelete
  19. அடப்பாவிங்களா! முடியல!
    அப்ப பயபுள்ள டீ.வி. பாக்கத்தான் பஞ்சாயத்தக் கூட்டி திரும்பவந்து சேர்ந்திருக்கு? ச்சே... என்ன கொடுமைடா சாமி!
    அந்தப் புள்ளக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்!

    ReplyDelete
  20. @ஜீ...://டீ.வி. பாக்கத்தான் பஞ்சாயத்தக் கூட்டி திரும்பவந்து சேர்ந்திருக்கு?// கலக்கல் கமெண்ட் ஜீ!

    ReplyDelete
  21. //இந்தியா படு ஸ்பீடாக வல்லரசு ஆகிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தச் செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கு...//

    வல்லரசு....டாஸ்மாக் வியாபாரத்தை பார்த்தால் கள்ளரசு வேணும்னா ஆகலாம்.

    ReplyDelete
  22. @! சிவகுமார் !: நாம இன்னுமா கள்ளரசு ஆகலை..

    ReplyDelete
  23. ஊத்தாப்பம் நடிகையா? அது யாருங்க..நீங்க படம் போட்டு இருக்கவங்க தாங்க ஹி ஹி!

    ReplyDelete
  24. @விக்கி உலகம்:என்ன..என் தலைவியைப் பற்றி என்னிடமே தவறாகப் பேசுவதா...இப்படி என்னை விக்கி விக்கி அழ வைக்கலாமா...

    ReplyDelete
  25. @சி.பி.செந்தில்குமார்: வந்து சிரித்து மகிழ்ந்ததுக்கு நன்றி பாஸ்!

    ReplyDelete
  26. கதை தமாஷா இருக்கு, பெண்டாட்டிய வேணும்னாலும் குடுக்கறேன், TV ரிமோட் தரமாட்டேன் என்கிற அளவுக்கு போயிட்டது துரதிர்ஷ்டம். காதலர் தினம் மேற்க்கத்திய இறக்குமதி, அதே மாதிரி பெண்டாட்டி எக்ஸ்சேஞ் கலாசாரத்தையும் இவனுங்க எடுத்துட்டானுங்க போலும், இன்னும் என்னவெல்லாம் பாக்கப் போறோமோ தெரியலையே!

    ReplyDelete
  27. @Jayadev Das; இன்னைக்குத் தான் மொத்தமா உட்கார்ந்து படிக்கிற மாதிரி தெரியுது...உங்களை மாதிரி நிறையப் பேரை நான் இப்போ தான் ரீச் பண்றேன்..நன்றி சார்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.