Friday, February 18, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_2


டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

RESEARCH & DEVELOPMENT (ஆராய்ச்சி & மேம்பாடு):
நமது என்ன வேலையில் சேரலாம் தொடரில் இன்று நாம் பார்க்கப் போவது R&D டிபார்ட்மெண்ட் பற்றி..


எதுக்கு இது?
ஆராய்ச்சினதும் பயந்துடாதீங்க. உற்பத்தி செய்யப்படுற பொருளின் எண்ணிக்கையைக் கூட்டவோ அல்லது அந்தப் பொருளைத் தயாரிக்க ஆகும் செலவைக் குறைக்கவோ இந்த டிபார்ட்மெண்ட் வேலை செய்யும்..
பொதுவா ஆராய்ச்சி செய்வதே, உற்பத்தி முறையை அல்லது பொருளை டெவலப் பண்றதுக்காகத் தான் இருக்கும்.
என்ன செய்வாங்க?
சரி, அப்படி என்ன ஆராய்ச்சி பண்றாங்க..ஒரு கம்பெனி ஒரு நாளைக்கு 2000 நட்டு தயாரிக்குன்னு வச்சுக்கோங்க. இவங்க அதைக் கூட்டமுடியுமா, என்ன செய்தால் கூட்டலாம், மெசினோட கெப்பாசிட்டியைக் கூட்டுனா வேலைக்காகுமா, இல்லே, வேற மெட்டீரியல் யூஸ் பண்ணலாமா, அதனால  வேற ஏதாவது பாதிப்பு வருமான்னு பல வகையில மண்டையை உடைச்சுக்கிறதுக்குப் பேருதான் ஆராய்ச்சி. சில நேரங்கள்ல பொருளோட தரத்தைக் கூட்ட ஆராய்வதும் உண்டு.

ஒரு சில கம்பெனியிலதான் உண்மையான ஆராய்ச்சி நடக்குது. மத்த கம்பெனில நடக்கிறதெல்லாம் சுடுற' வேலை தான்.
உதாரணமா ஒரு பம்ப் தயாரிக்கிற கம்பெனியை எடுத்துக்குவோம். ஏதாவது வெளிநாட்டுக் கம்பெனி, புது டெக்னிக்ல ஒரு பம்ப் தயாரிச்சு சக்ஸ்ஸ் பன்ணிட்டாங்கன்னா, அந்த பம்ப்பை வாங்கி பிரிச்சு ஆராய்ந்து, அதே மாதிரி இன்னொன்னு செய்றது. மாட்டிக்கிடாம இருக்க சைஸ், மெட்டீரியல்போன்ற சில விஷயங்களை மாத்திடுவாங்க.

இங்கே சேரணும்னா..

பொதுவா இந்த டிபார்ட்மெண்ட்ல நல்லா எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆளைத் தான் எடுப்பாங்க. சில கம்பெனிகள் ட்ரெய்னியா ஃப்ரெஷ் என்ஜினியர்களை எடுக்கறதும் உண்டு. இண்டர்வியூக்கு கூப்பிட்டா, அவங்க என்ன பொருளைத் தயாரிக்கிறாங்களோ, அதைப் பற்றி நல்லாப் படிச்சிட்டுப் போங்க.
டப்பு தேறுமா?
இதுல வேலை செய்றவங்களுக்கு பொதுவா நல்ல சம்பளம் இருக்கும். அதனால யாராவது ஏமாந்து போய் உங்களுக்கு R&D-ல வேலை கொடுத்தா, பயந்து போய் வேணாம்னு சொல்லிடாதீங்க
எங்கெல்லாம் இருக்கும்?
பெரும்பாலும் ஏதாவது ஒரு பொருளை (நட்டு, பம்ப், பஸ்!) உற்பத்தி செய்ற கம்பெனிகளில் இந்த டிபார்ட்மெண்ட் இருக்கும். உற்பத்தி சாராத கம்பெனிகள்ல பெரும்பாலும் R&D டிபார்ட்மெண்ட் இருக்கறதில்லை. டிசைன்(Design) டிபார்ட்மெண்ட்டே அந்த வேலையைப் பார்த்துக்கும்.

அதைப் பற்றி தொடரின் அடுத்த பதிவில் பார்ப்போம்.

டிஸ்கி: ரெசியூம்(Resume) எப்படித் தயாரிப்பது, இண்டர்வியூவில் எப்படிப் பேசுவது(புளுகுவது) என்பது பற்றி பின்னால் சொல்கிறேன்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

  1. @Chitra: பாராட்டுக்கு நன்றிக்கா!

    ReplyDelete
  2. ஸாரி பாஸ்! கொஞ்சம் வேலை! அதான் லேட்! அப்புறம்? அதென்ன 'நட்'டா? :-)
    நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. @ஜீ...: //அதென்ன 'நட்'டா?// நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...

    ReplyDelete
  4. நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள் ...

    ReplyDelete
  5. @sakthistudycentre-கருன்:பாராட்டுக்கு நன்றி சார்..இது இந்தப் பதிவுகு மட்டும்தானே..போன பதிவுக்கு இல்லையே...

    ReplyDelete
  6. பயனுள்ள பகிர்வு கண்டிப்பாக எல்லோருக்கும் பயன் படும்

    ReplyDelete
  7. அட்லீஸ்ட் யாருக்காவது இதை பற்றி சொல்லவாது எனக்கு இது உதவும் னு நினைக்கிறேன் செங்கோவி...

    ReplyDelete
  8. நல்லா கொடுக்குறாங்கப்பா டீடெய்லு.!!!

    ReplyDelete
  9. நல்ல பதிவு, தகவல்கள் பயனுள்ளதாக இருக்கின்றது. இத்துறை சார்ந்த வேலைவாய்ப்புத் தளங்களையும் இனங்காட்டினால் எம்போன்று வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு இன்னும் பிரயோசனமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. நன்றி

    ReplyDelete
  10. //செங்கோவி said... [Reply]
    @ஜீ...: //அதென்ன 'நட்'டா?// நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...//
    அடடா! என்னா வெளக்கம்! உங்க பதிலைப் பார்த்து நான் திரும்ப அந்தப் படத்தைப் பார்த்தேன்னா..பாத்துக்குங்க! :-)

    ReplyDelete
  11. @இரவு வானம்: படிக்கலைன்னா விடுங்க நைட்டு..ஏன் இப்படி கஷ்டப்பட்டு இங்கிலிபீஸ்ல கமெண்ட் போடுறீங்க..

    ReplyDelete
  12. @Jaleela Kamal: நன்றி ஜலீலா கமால்..

    ReplyDelete
  13. @ஆனந்தி..://யாருக்காவது இதை பற்றி சொல்லவாது// யாருக்காவது சொல்லி கிடைக்குற ரியாக்சனுக்கு நான் பொறுப்பில்லை..

    ReplyDelete
  14. @தீபிகா:பதிவுல உள்ள டீடெய்ல சொல்றீங்களா..இல்லே, பின்னூட்டத்துல கொடுத்த டீடெய்ல சொல்றீங்களான்னு தெரியல..எப்படியோ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  15. @Asfar: வேலை தேட இந்தத் துறைக்கும் www.naukri.com & www.monster.com தான்..நீங்கள் அதில் போட்டாலே கன்சல்டண்ட் பார்த்துவிட்டுக் கூப்பிடுவார்கள்..அடிக்கடி சும்மாவாவது நௌக்ரி-யத் திறந்து சேவ் செய்யுங்கள்..ஒரு மாதத்திற்கு மேல் ‘Last updated'காட்டியதென்றால், யாரும் கூப்பிடமாட்டார்கள்..எக்ஸ்பீரியன்ஸ் கம்மி என்றால், தெரிந்தவர்கள்/நண்பர்கள் மூலம் மூவ் பண்ணுவது பெட்டர்..

    ReplyDelete
  16. @ஜீ...:இது வேறயா..இந்தப் பதிவுக்கு இவ்வளவு பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கலை ஜீ...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.